Just In
- 13 hrs ago
10 மாதம் ஆற்றில் கிடந்த ஐபோன்: உரிமையாளரை தேடிச் சென்ற அதிசியம்!
- 13 hrs ago
வெறும் ரூ.8,000-க்கு அறிமுகமான 15000mAh பேட்டரி ஸ்மார்ட்போன்! அடஇது எப்போ?
- 13 hrs ago
5 கேமரா..iPhone 13 போல் டிஸ்பிளே..விலை வெறும் ரூ.7,600 மட்டுமே.. இது என்ன போன் தெரியுமா?
- 15 hrs ago
53 உயர்நிதிமன்ற நீதிபதிக்கு iPhone 13 Pro வாங்க புது டெண்டர்.. ஏன் ஐபோன் 13 செலக்ட் செஞ்சாங்க தெரியுமா?
Don't Miss
- Finance
ஒரே வாரத்தில் ரூ.1000 சரிவில் தங்கம் விலை.. இது வாங்க சரியான நேரமா?
- Movies
செல்ல நாயுடன் விமானத்தில் பறந்த நடிகை.. பணம் இருந்த இப்படியா? எல்லாம் காலக்கொடுமை கதிரவா!
- News
2002 குஜராத் வன்முறை: அமித்ஷா பேட்டியை தொடர்ந்து அடுத்தடுத்து போலீஸ் பாய்ச்சல்- மாஜி டிஜிபி கைது!
- Lifestyle
வார ராசிபலன் 26.06.2022-02.07.2022 - இந்த வாரம் நீண்ட பயணங்களைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது....
- Sports
மிரட்டும் மழை.. உம்ரான் மாலிக்கிற்கு வாய்ப்பு..? இந்தியாவின் பிளேயிங் லெவன்.. பிட்ச் ரிப்போர்ட்
- Automobiles
மஹிந்திரா எக்ஸ்யூவி300 கார் விற்பனையில் ஷங்கர் படம்போல் பிரம்மாண்ட வளர்ச்சி! உண்மையான காரணம் என்னனு தெரியுமா?
- Travel
இந்தியாவின் கடைசி கிராமமாம் இது - எவ்வளவு அழகாக இருக்கிறது என்று பாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா vs ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ: எந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்?
சாம்சங், ஆப்பிள் நிறுவனங்கள் மிகவும் சக்திவாய்ந்த சிப்செட், சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. எனவே தான் உலகம் முழுவதும் இந்த இரண்டு நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா vs ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ
அதேசமயம் இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களின் விலையை கேட்டால் தலை சுற்றி விடும். அதாவது இந்நிறுவனங்கள் சற்று
உயர்வான விலையில் தான் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. அதன்படி இந்நிறுவனங்கள் ஏற்கனவே சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ராமற்றும் ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் போன்களை அறிமுகம் செய்துள்ளன.

தனித்துவமான அம்சங்கள்
இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் தனித்துவமான அம்சங்களுடன் முன்பு கூறியபடி சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளன. இதில் எந்த ஸ்மார்ட்போன்களை நம்பி வாங்கலாம்? இந்த இண்டு ஸ்மார்ட்போன்களிலும் உள்ள அம்சங்கள் என்னென்ன? போன்றவற்றை இப்போது விரிவாகப்பார்ப்போம்.

இரண்டு ஸ்மார்ட்போன்களின் வடிவமைப்பு எப்படி உள்ளது?
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா எஸ் பென் ஸ்லாட்டுடன் வெளியிடப்பட்டது. அதேபோல் 2020-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி நோட் 20 ஸ்மார்ட்போனை போலவே உள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் குவாட் ரியர் கேமராக்கள், ஹோல்-பஞ்ச் பேனலுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா. குறிப்பாக இதன் வடிவமைப்பு ஓரளவு பரவாயில்லை என்றே கூறலாம்.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆனது டிஸ்பிளே நாட்ச், சதுர வடிவ டிரிபிள் ரியர் கேமரா உடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வளைந்த டிஸ்பிளேவுடன் வெளிவந்தாலும், ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் சாதனம் தட்டையான வடிவமைப்புடன் பிடித்து பயன்படுத்த அருமையாக உள்ளது. வடிவமைப்பை பொறுத்தவரை ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் தான் பெஸ்ட்.

டிஸ்பிளே அம்சங்கள் என்னென்ன?
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்லா ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் QHD+ Dynamic AMOLED டிஸ்பிளே மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் வசதியைக் கொண்டுள்ளது. அதேபோல் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆனது 6.7-இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ப்ரோமோஷன் ஓஎல்இடி டிஸ்பிளே மற்றும்120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவைக் கொண்டுள்ளது.

சிப்செட் மற்றும் பேட்டரி வசதி
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 4என்எம் மேம்பட்ட சிப் வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு அருமையாக இருக்கும். பின்பு 12ஜிபி ரேம், 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 5000 எம்ஏஎச் பேட்டரி, 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி போன்ற பல அம்சங்களைகொண்டுள்ளது கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல்.
மறுபுறம் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் ஆனது ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப் மூலம் இயக்கப்படுகிறது. இந்த சிப்செட் வசதி சிறந்த செயல்திறன் கொண்டது. அதேபோல் இந்த சாதனம் 6-கோர் சிபியு, 5-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சினுடன் வருகிறது. மேலும் 4352 எம்ஏஎச் பேட்டரி 20 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஐபோன் மாடல்.

கேமராவில் எப்போதும் சாம்சங் தான் கில்லி
கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் பின்புறம் பிரைமரி 108எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ், இரண்டு 10எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மொத்தம்நான்கு கேமராக்கள் உள்ளன.பின்பு செல்பீகளுக்கு என்றே 40எம்பி கேமராவுடன் வெளிவந்துள்ளது கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா.
ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் சாதனத்தின் பின்புறம் 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்களில் லென்ஸ் + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. இந்த போனின் முன்பக்கத்தில் 12எம்பி TrueDepth கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா vs ஆப்பிள் ஐபோன் 13 ப்ரோ: விலை இதுதான்
பிளிப்கார்ட் தளத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.1,05,999-ஆக உள்ளது. கிராஃபைட், சிவப்பு மற்றும் ஸ்கை ப்ளூநிறங்களில் இந்த கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்க முடியும்.
ஆல்பைன் கிரீன், கிராஃபைட், சில்வர் நிறங்களில் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் சாதனம் வெளிவந்துள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் இந்த ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ்சாதனத்தின் விலை ரூ.1,59,900-ஆக உள்ளது.

எந்த ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்?
இரண்டு ஸ்மார்ட்போன்களின் அம்சங்களும் அருமையாக உள்ளது. ஆனால் சிறந்த வடிவமைப்பு, சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டும்என்றால் ஐபோன் 13 ப்ரோ மேக்ஸ் தேர்வு செய்வது நல்லது. அதேபோல் அருமையான கேமரா வசதியை தேடும் வாடிக்கையாளர்கள் இந்தசாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது. கிட்டத்தட்ட இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சிறந்த ஸ்மார்ட்போன் அனுபவத்தைகொடுக்கும்.
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999