அசத்தலான அம்சங்களுடன் விரைவில் வெளிவரும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா
சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சில அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. அதைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

அதாவது கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது. எனவே ஸ்மார்ட்போனை விரைவில் சார்ஜ் செய்ய முடியும். இதுவரை சாம்சங் பிளாக்ஷிப் மாடல்களில் அதிகபட்சம் 25 வாட் சார்ஜிங் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது. எனவே இந்த கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா சாதனம் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே இந்த சாதனத்தில் 45 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இருப்பதால் 0 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 35 நிமிடங்கள் ஆகும். அதேபோல் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் வசதி உள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் மிக வேகமாக
செயல்படும்.

அதேபோல் 6.8-இன்ச் அமோலெட் டிஸ்பிளே, 108எம்பி பிரைமரி கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன். மேலும் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவரும் இந்த புதிய ஸ்மார்ட்போன்.
வெளிவந்த தகவலின்படி இந்த கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்
மாடலில் ஆண்ட்ராய்டு 12 OS வழங்கப்பட்டுள்ளது. மேலும் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறங்களில் இந்த அசத்தலான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,400 X 1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் பெரிய டிஸ்பிளே வசதி உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.
கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது கேலக்ஸி எம்52 5ஜி. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. எனவே அசத்தலான புகைப்படம், வீடியோக்களை எடுக்க முடியும்.
கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனில் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் உள்ளன. பின்பு 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன். இந்த சாதனத்தின் எடை 173 கிராம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications