Home
Mobile

108எம்பி கேமரா வசதியுடன் வெளிவரும் அசத்தலான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா.!

சாம்சங் நிறுவனம் அடுத்த ஆண்டு துவகத்தில் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் அசத்தலான அம்சங்களுடன் வெளிவரும். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

108எம்பி கேமரா வசதியுடன் வெளிவரும் அசத்தலான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா.!

குறிப்பாக கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் 108எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கேலக்ஸி நோட் 10 பிளஸ் மாடலில் இருப்பதை போன்றே வளைந்த டிஸ்பிளே ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

புதிய கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் ஆனது எக்சைனோஸ் 2200 சிப்செட், ஆர்.டி.என்.ஏ 2 கிராபிக்ஸ் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் மாடல் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் என்று கூறப்படுகிறது.

108எம்பி கேமரா வசதியுடன் வெளிவரும் அசத்தலான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா.!

சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பின்பு இந்த சாதனம் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சில வாரங்களுக்கு முன்பு இந்நிறுவனம் அறிமுகம் செய்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

108எம்பி கேமரா வசதியுடன் வெளிவரும் அசத்தலான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா.!

இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.7-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2,400 X 1,080 பிக்சல்
தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 போன்ற பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக பெரிய டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

108எம்பி கேமரா வசதியுடன் வெளிவரும் அசத்தலான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா.!

கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி சென்சார் + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக துல்லியமான வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுக்க இந்த ஸ்மார்ட்போன் மிகவும் அருமையாக உதவும்.

சாம்சங் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுடன் இந்த கேலக்ஸி எம்52 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி சிப்செட் வசதி உள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

108எம்பி கேமரா வசதியுடன் வெளிவரும் அசத்தலான கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா.!

5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட்உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போன். மேலும் இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ஆக்ஸிலரோமீட்டர், கைரோ சென்சார், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல்வேறு சென்சார் ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்52 5ஜி மாடல்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S22 Ultra is set to launch next year: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X