Home
Mobile

Samsung Galaxy Unpacked February 2022: அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன்.!

சாம்சங் நிறுவனம் பிப்ரவரி 9-ம் தேதி நடைபெறும் Samsung Galaxy Unpacked Event 2022 நிகழ்சியில் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் டேப்லெட், ஸ்மார்ட்போன்கள் என பல சாதனங்கள் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன்

குறிப்பாக இந்த நிகழ்ச்சியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுவதால் அதிகஎதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் அம்சங்களை
சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் மாடல்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.1-இன்ச் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும். பின்பு1080 x 2340 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

 கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின்

இந்த புதிய கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 10எம்பி டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு
அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் எக்ஸிநோஸ் 2200 அல்லது ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட் வசதி இடம்பெற வாயப்பு உள்ளது. குறிப்பாக கேமிங் வசதிக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போனை இயக்குதவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 8ஜிபி ரேம்

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்22 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த சாதனம் மிகவும் மெலிதாகவும், சிறந்த வடிவமைப்புடன் வெளிவரும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் 3700 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக கூறப்படுகி

இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் 3700 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. பின்பு 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் எனப் பல சிறப்பு அம்சங்களடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை
உருவாக்கியுள்ளது.

 கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில்

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் வைஃபை, ஜிபிஎஸ், புளூடூத் 5.0 எனப் பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனம் சற்று உயர்வான விலையில் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இருந்தபோதிலும் விலைக்கு தகுந்த அம்சங்கள்
இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S22 smartphone will be unveiled at the Samsung Unpacked 2022 event: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X