Home
Mobile

ரூ.500, ரூ.1000 இல்ல.. முழுசா ரூ.8,000 விலைக்குறைப்பை பெற்றுள்ள Samsung போன்.. எந்த மாடல்?

சாம்சங் (Samsung) நிறுவனத்தின் மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன் ஒன்றின் முழுதாக ரூ.8,000 என்கிற விலைக்குறைப்பு (Price Cut) அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னொரு சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இதுவொரு நிரந்தரமான விலைக்குறைப்பாகும். அதென்ன மாடல்? பழைய மற்றும் புதிய விலை என்ன? இதோ விவரங்கள்:

ரூ.8,000 நிரந்தர விலைக்குறைப்பை பெற்றுள்ளது சாம்சங் கேலக்ஸி எஸ்22 (Samsung Galaxy S22) ஸ்மார்ட்போனாகும். நினைவூட்டும் வண்ணம், இந்தியாவில் இது கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை நிர்ணயம் ரூ.72,999 ஆகும்.

முழுசா ரூ.8,000 விலைக்குறைப்பை பெற்றுள்ள Samsung போன்.. எந்த மாடல்?

தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ரூ.8000 என்கிற நிரந்தர விலைக்குறைப்பிற்கு பின்னர் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டரோஜ் ஆப்ஷன் ஆனது, அதாவது 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்ட வேரியண்ட் ஆனது ரூ.72,999 க்கு பதிலாக ரூ.64,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் சாம்சங் நிறுவனமானது, முந்தைய சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இருந்து புதிய மாடலுக்கு அப்கிரேட் ஆகும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.7,000 என்கிற அப்கிரேட் போனஸையும் (Upgarde Bonus) வழங்குகிறது. இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் பேஸிக் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.57,999 ஆக குறைக்க முடியும்.

ஒருவேளை நீங்கள் வங்கி சலுகைகளையும் சேர்த்து பயன்படுத்தினால் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் இறுதி விலையை (Final Price) ரூ.54,999 ஆக குறைக்கலாம். இதற்கு நீங்கள் ரூ.3000 என்கிற பேங்க் கேஷ்பேக் ஆஃபரை (Bank Cashback Offer) பயன்படுத்த வேண்டி இருக்கும்.

இந்த போன் சாம்சங் இந்தியா இணையதளம், அமேசான் மற்றும் நாடு முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ரீடெயில் ஸ்டோர்களில் வாங்க கிடைக்கிறது. மேலும் இந்த போன் 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனிலும் கிடைக்கிறது மற்றும் போரா பர்பில், கிரீன், பாண்டம் பிளாக், பாண்டம் ஒயிட் மற்றும் பிங்க் கோல்டு என மொத்தம் 5 கலர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்படுகிறது.

அம்சங்களை பொறுத்தவரை, இது 6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டைனமிக் அமோஎல்இடி 2எக்ஸ் (FHD+ Dynamic AMOLED 2X) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இதன் டிஸ்பிளே 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் (Gorilla Glass Victus Plus) பாதுகாப்புடன் வருகிறது.

டூயல் நானோ சிம் கார்டு ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாக கொண்ட சாம்சங் நிறுவனத்தின் சொந்த ஒன் யுஐ 4.1 (அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்) கொண்டு இயக்கப்படுகிறது. மேலும் இது 4என்எம் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 சிப்செட்டை (Octa-core Snapdragon 8 Gen 1 SoC) பேக் செய்கிறது.

கேமராக்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் ட்ரிபிள் ரியர் கேமரா யூனிட் உள்ளது. அதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷனுடனான (Optical image stabilization - OIS) கொண்ட 50 மெகாபிக்சல் மெயின் கேமரா + அல்ட்ரா-வைட் ஷூட்டருடன் கூடிய 12 மெகாபிக்சல் சென்சார் + டெலிஃபோட்டோ லென்ஸுடன் கூடிய 10 மெகாபிக்சல் சென்சார் உள்ளன.

முன்பக்க கேமராவை பொறுத்தவரை, டிஸ்பிளேயின் மேற்புற மையத்தில், பஞ்ச்-ஹோல் ஸ்லாட்டில் 10 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 25W வயர்டு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் 3,700mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. கடைசியாக இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங், இன்-டிஸ்பிளே ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S22 Smartphone Price in India Reduced Permanently
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X