50எம்பி கேமரா, 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
சாம்சங் நிறுவனம் இன்று நடைபெற்ற Galaxy Unpacked 2022 நிகழ்ச்சியில் புதிய கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த சாதனம் அசத்தலான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவந்துள்ளது இப்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் விபரங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போன் ஆனது 6.1-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Dynamic AMOLED 2எக்ஸ் டிஸ்பிளேவசதியைக் கொண்டுள்ளது. பின்பு கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ பாதுகாப்பு, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல
சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட் டிஸ்பிளே வசதிக்கு அதிககவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் 4என்எம் பிராசஸர் வசதி உள்ளது. மேலும் இந்த சாதனம் One UI 4.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும்அருமையாக இருக்கும்.

இந்த புதிய கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா ( f/1.8 aperture) + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 10எம்பி டெலிபோட்டோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் 3700 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளது. மேலும் 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான வயர்லெஸ் பவர்ஷேர் உள்ளிட்ட பல ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் எடை 168 கிராம் என்பது குறிப்பிடத்தக்கது.

5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, புளூடூத் வி5.2, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்22 ஸ்மார்ட்போனில் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக கருப்பு, வெள்ளை, தங்க நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை $799 (இந்திய மதிப்பில் ரூ.59,800) ஆக உள்ளது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications