Home
Mobile

நடக்கும்னு சொல்லல நடந்தா நல்லா இருக்கும்: Samsung போன் குறித்த முக்கிய தகவல்!

Samsung Galaxy S22 FE ஸ்மார்ட்போனானது 108 எம்பி முதன்மை கேமரா உடன் 2023 இல் தொடங்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனானது Exynos 2200 SoC அல்லது Snapdragon 8 Gen 1 SoC மூலம் இயக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது. சாம்சங் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இது 2023 இல் வெளியாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

சாம்சங் எஸ்22 எஃப்இ

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22 தொடரில் எஸ்22 அல்ட்ரா மாடலை அறிமுகம் செய்தது. இதையடுத்து இந்த ஸ்மார்ட்போன் தொடரில் கேலக்ஸி எஸ்22 எஃப்இ இடம்பெறாது என தகவல்கள் வெளியானது. சாம்சங் பிரியர்களும் இந்த தொடரில் எஃப்இ மாடல் வெளியாகாது என நம்பத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தான் சாம்சங் எஸ்22 எஃப்இ குறித்த தகவல் வைரலாகத் தொடங்கி இருக்கிறது.

நடந்தா நல்லா இருக்கும்: Samsung போன் குறித்த முக்கிய தகவல்!

Galaxy S22 FE செயல்பாட்டில் இருக்கலாம் என டிப்ஸ்டர் தகவல் வெளியாகி இருக்கிறது. மறுபுறம் பிப்ரவரியில் கேலக்ஸி எஸ் 23 சீரிஸை அறிமுகப்படுத்த நிறுவனம் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. எனவே எஸ்23க்கு முன்பாகவே கேலக்ஸி எஸ் 22 எஃப்இ அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஆனால் வராது..

டிப்ஸ்டர் @OreXda என்பவர் தகவின்படி, சாம்சங் நிறுவனம் கேலக்ஸி பட்ஸ் 2 லைவ் உடன் கேலக்ஸி எஸ் 22 எஃப்இ ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்யும் என சுட்டிக்காட்டியுள்ளார். ஃபேன் எடிஷன் மாறுபாட்டைக் கொண்ட எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனாக இது இருக்கலாம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதேபோல் மறுபுறம் டிப்ஸ்டர் டோஹ்யுன் கிம் (@dohyun854) Galaxy S23 FE பதிப்பு ஒருபோதும் வெளிச்சத்தைக் காணாது என குறிப்பிட்டுள்ளார். அதாவது இது அறிமுகமாக வாய்ப்பே இல்லை என தெரிவித்துள்ளார்.

சாம்சங் சொல்வது என்ன?

இந்த ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதையும் நிறுவனம் உறுதி செய்யவில்லை. Galaxy Unpacked நிகழ்வுக்குப் பிறகு Galaxy S22 FE குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என டிப்ஸ்டர் RGcloudS பரிந்துரைத்திருக்கிறது.

புது போனின் விலை என்ன?

சாம்சங் 2023 ஆம் ஆண்டின் Q3 இல் இரண்டாவது Galaxy Unpacked நிகழ்வை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்வில் Galaxy S22 FE ஸ்மார்ட்போனானது Galaxy A74 என அறிமுகம் செய்யப்படலாம் என டிப்ஸ்டர் RGcloudS குறிப்பிட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.41,999 என இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

108 எம்பி பிரதான கேமரா

அதேபோல் Galaxy S22 FE ஆனது 4nm Exynos 2300 SoC சிப்செட் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் Samsung ISOCEL HM6 108-மெகாபிக்சல் சென்சார் கொண்டிருக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் Exynos 2200 SoC அல்லது Snapdragon 8 Gen 1 சிப்செட் மூலம் இயக்கப்படலாம் என மற்றொரு தகவலில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நடந்தா நல்லா இருக்கும்: Samsung போன் குறித்த முக்கிய தகவல்!

கேலக்ஸி எஃப் 14

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஃப் தொடரின் கீழ் புதிய ஸ்மார்ட்போனை இந்திய சந்தைக்கு கொண்டு வர தயாராகி வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது. கேலக்ஸி எஃப்13க்கு அடுத்தப்படியாக கேலக்ஸி எஃப் 14 அறிமுகமாக இருக்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. கேலக்ஸி எஃப்13 ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஸ்மார்ட்போன் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எஃப்14 ஜனவரி முதல் வாரத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிறுவனத்திடம் இருந்து இதுகுறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. வரும் நாட்களில் சாம்சங் இதுகுறித்து டீஸ் செய்யத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S22 FE Might Launching Soon With This Specs: Expected Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X