விரைவில் Samsung கேலக்ஸி S21 சீரிஸ் அறிமுகம்.. மொத்தம் மூன்று மாடலா?

|

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S21, சாம்சங் கேலக்ஸி S21 பிளஸ், சாம்சங் கேலக்ஸி S 21 அல்ட்ரா என்ற மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் Samsung கேலக்ஸி S21 சீரிஸ் அறிமுகம்.. மொத்தம் மூன்று மாடலா?

சாம்சங் நிறுவனம் அடுத்த கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போனான கேலக்ஸி எஸ் 21 மாடலை அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குறித்த வதந்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது இது இந்திய தர நிர்ணய பணியகம் (பிஐஎஸ்) சான்றிதழை பெற்றுள்ளது. இந்த தகவல் கேலக்ஸி எஸ்21 விரைவில் வெளியாகும் என்பதை உறுதிப்படுத்துகிறது.

சாம்சங் நிறுவனம் எஸ் தொடர் ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டின் முதல் பாதியில் அறிமுகப்படுத்தி வருகிறது. அதேபோல் 2021 ஆம் ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 20 சீரிஸ் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் உலக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வரை வெளியாகவில்லை. கேலக்ஸி எஸ் 21, கேலக்ஸி எஸ் 21+, சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் இதில் இடம்பெறும் என கூறப்படுகிறது. கடந்த சில மாதங்களாகவே மூன்று ஸ்மார்ட்போன்கள் குறித்த தகவல்கள் ஆன்லைனில் கசிந்த வண்ணம் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 செயலி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் எக்ஸினோஸ் சிப்செட்டுன் இந்த மாடல் வெளவர வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. தகவலின்படி சாம்சங் கேலக்ஸி எஸ் 21 6.2 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, சாம்சங் கேலக்ஸி எஸ் 21+ 6.7 இன்ச் டிஸ்ப்ளே, கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வரும் என தெரிவிக்கப்படுகிறது. இதில் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் ஆதரவுடன் வரும்.

கேலக்ஸி எஸ் 21 மற்றும் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பின்புறத்தில் 12 எம்பி, 12 எம்பி, 64 எம்பி கேமராவுடன் வரும் என கூறப்படுகிறது. அதேபோல் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா 108 எம்பி கேமரா, 12 எம்பி அல்ட்ராவைட், 10 எம்பி கேமரா, 10 எம்பி கேமரா இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் இது முறையே 4000 எம்ஏஎச், 4800 எம்ஏஎச், 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy S21 Series Will Be Launching Soon In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X