சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அவ்வளவுதான்: அதுக்கு இவ்வளவு சலுகை, ஆஃபர்களா?

|

சாம்சங் கேலக்ஸி எஸ்21+ ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை எச்டிஎஃப்சி வங்கி கிரெட் மற்றும் டெபிட் கார்ட் மூலம் வாங்கும்போது ரூ.7000 வரை கேஷ்பேக் பெறலாம். கேலக்ஸி எஸ்21 சீரிஸ் எக்ஸ்சேஞ்ச் ஆஃபரில் வாங்கும் போது ரூ.10,000 வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்21+ சாதனத்தை கேலக்ஸி ஆக்டிவ் 2, கேலக்ஸி பட்ஸ் ப்ரோவுடன் இணைக்கக்கூடிய பண்டல் சலுகையும் இதில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21, கேலக்ஸி எஸ்21+ மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ராவை நிறுவனம் ஜனவரி 2021-ல் அறிமுகப்படுத்தியது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ் 21+ மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ் 21+ மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா

சாம்சங் நிறுவனம் ஜனவரி 2021 ஆம் ஆண்டு சாம்சங் கேலக்ஸி எஸ்21, கேலக்ஸி எஸ் 21+ மற்றும் கேலக்ஸி எஸ்21 அல்ட்ராவை அறிமுகப்படுத்தியது. சாம்சங் கேலக்ஸி எஸ் 201+ சாதனம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு நிறுவனம் உடனடி ரூ.5000 கேஷ்பேக் சலுகையை அறிவித்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் பிரத்யேக ஸ்டோர்கள் மற்றும் பிற முன்னணி ஆன்லைன் ஆஃப்லைன் கடைகளில் சாதனம் வாங்கும் பயனர்களுக்கு இந்த சலுகை கிடைக்கிறது. அதேபோல் பயனர்களுக்கு நிறுவனம் ரூ.7000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் சலுகையும் வழங்குகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21+

சாம்சங் கேலக்ஸி எஸ்21+

சாம்சங் கேலக்ஸி எஸ்21+ ஸ்மார்ட்போனானது சாம்சங் இணையதளத்தில் ரூ.76,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு உடனடி கேஷ்பேக் மற்றும் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் மூலம் ரூ.64,999-க்கு பெறலாம். அதேபோல் வாடிக்கையாளர்களுக்கு எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாங்கும் போது ரூ.7000 கேஷ்பேக் சலுகையும் கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 கேஷ்பேக்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 கேஷ்பேக்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 தொடரில் எந்த மாடல் ஸ்மார்ட்போன் வாங்கினாலும் ரூ.990 கூடுதலாக செலுத்தும்போது ரூ.23,990 மதிப்பிலான கேலக்ஸி வாட்ச் ஆக்டிவ் 2 அல்லது ரூ.15,990 மதிப்பிலான கேலக்ஸி பட்ஸ் ப்ரோ வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனுக்கு பரிமாற்ற சலுகையாக ரூ.5000 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போனுக்கு எக்ஸ் சேஞ்ச் சலுகையாக ரூ.10,000 போனஸ்-ம் கிடைக்கிறது.

ஆண்ட்ராய்டு 11 ஒன் யூஐ ஓஎஸ் பதிப்பு

ஆண்ட்ராய்டு 11 ஒன் யூஐ ஓஎஸ் பதிப்பு

அதேபோல் ரூ.73,999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனை எச்டிஎஃப்சி கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்கள் மூலம் வாங்கும் போது ரூ.5000 மற்றும் ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது. இதன்மூலம் சுமார் ரூ.73,999 மதிப்புள்ள இந்த ஸ்மார்ட்போனை ரூ.68,999-க்கு வாங்கலாம். ரூ.1,05,999 மதிப்புள்ள சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஸ்மார்ட்போனை இந்த சலுகை அறிவிப்பின் மூலம் ரூ.95,999-க்கு கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 11 ஒன் யூஐ ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

108 மெகாபிக்சல் முதன்மை கேமரா

சாம்சங் கேலக்ஸி எஸ்21 தொடரில் இருக்கும் மூன்று சாதனங்களும் எக்ஸினோஸ் 2100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ்21 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21+ ஆகிய இரண்டு மாடல்களும் மூன்று பின்புற கேமராக்களை கொண்டுள்ளது. கேமரா அமைப்பை பொறுத்தவரை 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ், 12 மெகாபிக்சல் அகல கோண கேமரா மற்றும் 64 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் ஆகியவை இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போனானது 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் ஓஐஎஸ் ஆதரவுடன வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 Series Smartphones Gets Amazing Offers and Discounts.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X