வெறும் ரூ.2000 செலவில் Samsung Galaxy S21 முன்பதிவு செய்தால் ரூ. 3849 மதிப்பில் கேஸ் இலவசம்..

|

சம்சுங்கின் Samsung Galaxy Unpacked 2021 ஈவென்ட் வரும் ஜனவரி 14ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலான Samsung Galaxy S21 சீரிஸ் போன்கள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக மொபைல் கேஸ் கிடைக்கும் என்று நிறுவனம் தற்பொழுது அறிவித்துள்ளது. இதை எப்படிப் பெறுவது என்ற பார்க்கலாம்

வெறும் ரூ .2000 செலவில் முன்பதிவு

வெறும் ரூ .2000 செலவில் முன்பதிவு

வாடிக்கையாளர்கள் டோக்கன் தொகையாக வெறும் ரூ .2000 செலுத்துவதன் மூலம் வரவிருக்கும் கேலக்ஸி S21 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்யலாம். வரவிருக்கும் கேலக்ஸி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை விரைவாக அணுக ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் இந்தியாவின் இ-ஸ்டோர், www.samsung.com அல்லது சாம்சங் ஷாப் ஆப்ஸ் மூலம் இந்த முன்பதிவை எளிமையாகச் செய்துமுடிக்கலாம்.

நெக்ஸ்ட் கேலக்ஸி வி.ஐ.பி பாஸ்

நெக்ஸ்ட் கேலக்ஸி வி.ஐ.பி பாஸ்

முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 'நெக்ஸ்ட் கேலக்ஸி வி.ஐ.பி பாஸ்' கிடைக்கும். வாடிக்கையாளர் பின்னர் சாதனத்தை முன்பதிவு செய்யும் போது, ​​டோக்கன் தொகையான ரூ. 2000 சாதன விலையிலிருந்து கழிக்கப்படும். கேலக்ஸி ஃபிளாக்ஷிப் போனை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ. 3849 மதிப்புள்ள மொபைல் கவர் இலவசமாகக் கிடைக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.8,999 விலையில் தரமான அம்சங்களுடன் சாம்சங் கேலக்ஸி M02s ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

 Samsung Galaxy S21 சீரிஸ்

Samsung Galaxy S21 சீரிஸ்

சாம்சங்கின் வரவிருக்கும் Samsung Galaxy S21 சீரிஸ் போன்களுக்கான முன்பதிவு விருப்பம் ஜனவரி 14, 2021 வரை நடைபெறும். வடிவமைப்பைப் பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ் 21, எஸ் 21 + மற்றும் எஸ் 21 அல்ட்ரா போன்களை போல் ஒரே மாதிரியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வண்ண விருப்பங்கள்

வண்ண விருப்பங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 ஸ்மார்ட்போன் வயலட், கிரே, ஒயிட் மற்றும் பிங்க் நிறத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சாம்சங் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஸ்மார்ட்போன் வயலட்டில், சில்வர் மற்றும் பிளாக் நிறத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா மாடல் ஸ்மார்ட்போன்கள் சில்வர் மற்றும் பிளாக் வண்ணங்களில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 series pre-orders now open in India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X