Home
Mobile

Samsung Galaxy S21, S21+ மற்றும் S21 Ultra ஸ்மார்ட்போனின் விலையில் இதுதானா?

கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் இப்போது பல மாதங்களாக வலைத்தளத்தில் காணப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் இந்த சாதனம் பற்றிய சில விவரங்களையும், சில உறுதிப்படுத்தும் புதிய கசிவுகளையும் கடந்த சில வாரங்களில் நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்பொழுது S21 தொடரின் கீழ் உள்ள மூன்று மாடல்களின் விலை பட்டியல் மற்றும் ஸ்டோரேஜ் வேரியண்ட் விபரங்களை வெளியாகியுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21, எஸ் 21 பிளஸ் மற்றும் எஸ் 21 அல்ட்ரா

சாம்சங் கேலக்ஸி எஸ் 21, எஸ் 21 பிளஸ் மற்றும் எஸ் 21 அல்ட்ரா

வின்ஃபியூச்சர் அறிக்கையின்படி சாம்சங் கேலக்ஸி எஸ் 21, எஸ் 21 பிளஸ் மற்றும் எஸ் 21 அல்ட்ரா ஆகிய ஸ்மார்ட்போனின் விலைகளை நிறுவனம் வெளியிட்டுள்ளது, அதன்படி சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அடிப்படை வேரியண்ட் மாடலான 128 ஜிபி மாடலுக்கு இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ. 76,400 ஆக விலை இருக்கக்கூடும். 256 ஜிபி உடைய இரண்டாவது வேரியண்ட் தோராயமாக ரூ .80,900 ஆக வெளிவரக்கூடும்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் விலை என்ன?

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் விலை என்ன?

அதேபோல், 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 21 பிளஸ் ஸ்மார்ட்போன் தோராயமாக ரூ. 94,400 என்ற விலையிலும், இதன் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடல் தோராயமாக ரூ. 98,900 என்ற விலையிலும் வெளியாகக்கூடும் என்று வின்ஃபியூச்சர் அறிக்கை தெரிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் வரிசையில் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா இடம் பெரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா விலை என்னவாக இருக்கும்?

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா விலை என்னவாக இருக்கும்?

இந்த தொடரின் மிக சக்திவாய்ந்த ஸ்மார்ட்போங்கவும் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலின் விலை தோராயமாக ரூ. 1,21,400 இருக்கும் என்றும், இதன் 256 ஜிபி வேரியண்ட் மாடல் தோராயமாக ரூ. 1,25,900 என்ற விலையிலும் மற்றும் இதன் 512 ஜிபி வேரியண்ட் மாடல் தோராயமாக ரூ. 1,37,500 விலையிலும் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.

5 ஜி வேரியண்ட் மாடலாக மட்டும் தான் வெளிவருமா?

5 ஜி வேரியண்ட் மாடலாக மட்டும் தான் வெளிவருமா?

அறிக்கையின்படி, பல்வேறு நாடுகளில் உள்ள VAT விகிதங்கள் காரணமாக பிராந்திய அடிப்படையில் விலைகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் 5 ஜி வேரியண்ட் மாடலாக மட்டுமே வரும், ஒரு சில இடங்களில் மட்டும் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் சாதனங்கள் LTE பதிப்புடன் கிடைக்கும் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 Series European pricing and details : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X