சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் மாடல்களின் முக்கிய அம்சங்கள் லீக்.! அறிமுகம் எப்போது?

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன் மாடல்களை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது இந்நிறுவனம். மேலும் சமீபத்தில் வெளியான ஒரு புதிய லீக்ஸ், சீனாவின் 3 சி சான்றிதழ் தளத்தின் வழியாக சாம்சங் நிறுவனத்தின் மூன்று ஸ்மார்ட்போன்கள் அதன் பேட்டரி விவரங்களை வெளிப்படுத்தியுள்ளன. பின்பு அந்த மாடல்கள் டிஸ்பிளே குறித்த சில விவரங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

அந்த மாடல்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்21

குறிப்பாக அந்த மாடல்கள் சாம்சங் கேலக்ஸி எஸ்21 சீரிஸ் ஸ்மார்ட்போன்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இந்தத் தொடரில் சாம்சங் கேலக்ஸி எஸ்21, சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஆகிய மூன்று மாடல்களின் வருகையைக் காணலாம்.

கேலக்ஸி எஸ்21

சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போன்கள் 3சி சான்றிதழில் காணப்பட்டிருப்பதை, சீன சமூக ஊடகத்தளமான வெய்போ வழியாக பகிர்ந்து கொண்டது டிப்ஸ்டர் டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் ஆகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

கெத்து காட்டும் Vi Double data ஆபர்: அதே விலையில் இரட்டிப்பு டேட்டா!கெத்து காட்டும் Vi Double data ஆபர்: அதே விலையில் இரட்டிப்பு டேட்டா!

 கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனின் மாடல்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனின் மாடல் நம்பர் எஸ்எம்-ஜி 9910 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது 3800எம்ஏஎச் பேட்டரி ஆதரவு மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்21 பிளஸ்

அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது 3சி-இல் மாடல் நம்பர் எஸ்எம்-ஜி 9960 உடன் காணப்பட்டது. மேலும் இது 4600எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசியாக மிகவும் பிரீமியம் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ் 21 அல்ட்ரா ஆனது 4,800 எம்ஏஎச் ஆதரவுடன் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. அல்ட்ரா மாடலானது மாடல் நம்பர் எஸ்எம்-ஜி 9980 என்பதின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது.

 ஸ்மார்ட்போன்களுமே 25வாட் பாஸ்ட்

மேலும் மூன்று ஸ்மார்ட்போன்களுமே 25வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவிர குவால்காம் ஸ்னாப்டிராகன் 875 SoC மூலம் இயக்கப்படும் முதல் ஸ்மார்ட்போன்களாகவும் இருக்கலாம்.

கேலக்ஸி எஸ்21 மற்றும்

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்21 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 பிளஸ் ஆகியவை 2 டி திரைகளுடன் வருகின்றன, அதாவது வளைந்த டிஸ்பிளே இருக்காது. ஆனால் பிரீமியம் மாடலான சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா ஸ்மார்ட்போன் ஆனது வளைந்த விளிம்புகளைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்புற கேமராக்கள்

மேலும் எதிர்பார்க்கப்படும் மற்ற அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி எஸ்21 ஸ்மார்ட்போனில் மூன்று பின்புறகேமராக்கள் இருக்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்21 அல்ட்ரா பின்புறத்தில் குவாட் கேமராக்களைக் காண வாய்ப்புள்ளது.

 என்று சமீபத்திய அறிக்கைகள்

இந்த சாதனங்களின் அறிமுகத்தை பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டிலிருந்து உற்பத்தி தொடங்கி இவைகள் ஜனவரி மாத தொடக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று சமீபத்திய அறிக்கைகள் தெரிவிக்கிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 Series Battery Size Leaked via 3C Listing and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X