நம்பிக்கை வீண் போகல! இந்தியாவுக்கு வருகிறது தரமான Samsung 5ஜி போன்! இதுக்காகதான்யா காத்துக் கிடந்தோம்!
சாம்சங் நிறுவனம் தரமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட சிறந்த பாதுகாப்பு அம்சத்தை வழங்குகிறது சாம்சங் நிறுவனம். எனவே இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் ஒரு அசத்தலான ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. அதாவது சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ (Samsung Galaxy S21 FE) எனும் ஸ்மார்ட்போனை தான் சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது. குறிப்பாக இந்த போன் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

அதாவது ஸ்னாப்டிராகன் சிப்செட், பெரிய டிஸ்பிளே மற்றும் அட்டகாசமான கேமரா எனப் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு எக்ஸிநோஸ் 2100 சிப்செட் உடன் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ போன் ரூ.54,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் வெளிவரும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. மேலும் இப்போது ஆன்லைனில் வெளியான இந்த போனின் அனைத்து அம்சங்களையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதியை அடிப்படையாகக் கொண்டு வெளிவரும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 12எம்பி மெயின் கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனின் உதவியுடன் துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும்.
அதேபோல் டூயல் ரெக்கார்டிங், போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட், ஸ்பேஸ் ஜூம், சிங்கிள் டேக் கேமரா உள்ளிட்ட பல கேமரா அம்சங்களுடன் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும். குறிப்பாக இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது சாம்சங் போன்.
6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த போனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த போன் அறிமுகமாகும்.

4500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவரும். எனவே இந்த போன் நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 15 வயர்லெஸ் சார்ஜிங் வசதி, ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் இந்த புதிய சாம்சங் போன் அறிமுகமாகும்.
அதேபோல் 5ஜி, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவரும். மேலும் இணையத்தில் வெளியான தகவலின்படி சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.40,000-க்குள் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications