சத்தமின்றி அறிமுகமான புதிய Samsung 5ஜி போன்? என்ன விலை? என்னென்ன அம்சங்கள்?
இந்தியாவில் ஒன்பிளஸ், சியோமி, விவோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை விட சாம்சங் நிறுவனத்தின் போன்களுக்கு தான் அதிக வரவேற்பு உள்ளது. குறிப்பாக மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் இந்நிறுவனம் போன்களை அறிமுகம் செய்வதால் அதிக வரவேற்பு உள்ளது.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போன் மாடலின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்டை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த புதிய ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்ட மாடல் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

முன்பு இந்த ஸ்மார்ட்போனின் டீசர் வெளியிடப்பட்டு இருந்த நிலையில் கேலக்ஸி எஸ்21 எப்இ புதிய வேரியண்ட் வெளியாகி உள்ளது. மேலும் கேலக்ஸி எஸ்21 எப்இ மாடலின் ஸ்னாப்டிராகன் 888 வேரியண்ட் விலை ரூ.49,999-ஆக உள்ளது. ஆனால் அறிமுகம் சலுகையாக இந்த மாடலை ரூ.44,999-விலையில் வாங்க முடியும்.
அதேபோல் எக்சைனோஸ் சிப்செட் மாற்றாக குவால்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் கொண்டிருக்கும் கேலக்ஸி எஸ்21 எப்இ மாடலின் மற்ற அம்சங்கள் அதன் முந்தைய வெர்ஷனில் உள்ளதையே போன்றே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கேலக்ஸி எஸ்21 எப்இ மாடலின் சிறப்புகளைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
இந்த கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் AMOLED ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன். குறிப்பாக இந்த போன் பெரிய டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.
12எம்பிபிரைமரி கேமரா + 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ் + 8எம்பி டெலிபோட்டோ கேமரா என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் அட்டகாசமான புகைப்படங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 32எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
4500 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் இந்த அசத்தலான கேலக்ஸி எஸ்21 எப்இ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கிடைக்கும். பின்பு 25 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, இன்-டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல அசத்தலான அம்சங்களைக் கொண்டுள்ளது இந்த போன்.
5ஜிஇ 4ஜி வோல்ட்இ, வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் குறைந்த எடை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஸ்மார்ட்போன் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளதால் நம்பி வாங்கலாம்.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications








