மூன்று கேமரா, முழு எச்டி+ டிஸ்ப்ளே ஆதரவோடு வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ- விலை, அறிமுக தேதி தெரியுமா?
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனின் கசிந்த விவரக்குறிப்புகள் மற்றும் விலை அம்சங்கள் குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ விவரக்குறிப்புகள் தற்போது ஆன்லைனில் கசிந்துள்ளன. இந்த சாதனம் கிராஃபைட், வைட், ஆலிவ் க்ரீன் மற்றும் லாவெண்டர் வண்ண விருப்பத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே கொண்டிருக்கும் எனவும் இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி அல்லது எக்ஸினோஸ் 2100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சாதனம் மற்றும் ஃபேன் பதிப்பு அடுத்த மாதம் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சாதனம் வெளியீட்டுக்கு முன்னதாக சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனின் முழுமையான விவரக்குறிப்புகள் மற்றும் விலை ஆன்லைனில் கசிந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ விலை விவரங்கள்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ விலை விவரங்கள் குறித்து பார்க்கலாம். SamMobile மூலம் கசிந்த விவரங்கள் குறித்து பார்க்கையில், இது வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சாதனமானது $699 விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் அடிப்படை வேரியண்ட் விலை ரூ.53,000 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் கிராஃபைட், வைட், ஆலிவ் க்ரீன் மற்றும் லாவெண்டர் வண்ண விருப்பத்தில் கிடைக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி அல்லது எக்ஸினோஸ் 2100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் வேரியண்ட்டில் கிடைக்கும் எனவும் இது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் அறிக்கைப்படி மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட்டை தவிர்க்க நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் இதன்மூலம் இதில் மெமரி விரிவாக்கம் செய்ய முடியாது எனவும் கூறப்படுகிறது.

120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இந்த சாதனத்தில் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு அம்சம் இருக்கும் எனவும் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு என பஞ்ச் ஹோல் கட்அவுட் வசதியோடு 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் எனவும் இதில் 12 மெகாபிக்சல் பிரதான கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ராவைட் ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 15 வரை புதுப்பிப்பு பெறலாம்
இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான ஒன்யூஐ 4.0 அவுட் ஆஃப் பாக்ஸ் மூலம் இயங்கும் எனவும் ஆண்ட்ராய்டு 15 வரையிலான ஓஎஸ் அப்டேட்டை இந்த சாதனம் பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஐபி 68 வாட்டர் ரெசிஸ்டன்ட் ஆதரவோடு இது வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 25 வாட்ஸ் வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15 வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வரும் எனவும் இது 4500 எம்ஏஎச் பேட்டரி உடன் இது வரும் என கூறப்படுகிறது. 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, யூஎஸ்பி டைப் சி ஆகிய ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ வெளியீட்டு தேதியை சாம்சங் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. சிஇஎஸ் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறுகிறது என்பதால் இந்த நிகழ்வில் சாம்சங் போன் அறிமுகப்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜனவரி 5 முதல் ஜனவரி 8-க்குள் அறிமுகமாகலாம்
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ-ன் வாரிசாக சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வெளியீடு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சிஇஎஸ் 2022-ல் அதிகாரப்பூர்வமாக வரும் என கூறப்படுகிறது. ஜனவரி 5 முதல் ஜனவரி 8-க்கு இந்த அறிமுகம் இருக்கலாம் என கூறப்படுகிறது. சாம்சங் இந்த அறிமுகத்தை அதிகாரப்பூரவமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகாரப்பூர்வமாக கசிந்த ரெண்டர்கள்
சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ உலகளாவிய அறிவிப்பின் அதே சமயத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்துறை ஆதாரங்களை பிரத்யேமாக அறிவித்த 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதத்தில் நாட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி வெளியிடப்படவில்லை. இந்தியாவில் பிளாக், க்ரீன் இளஞ்சிவப்பு மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் ஸ்மார்ட்போன் வரும் என அறிக்கை தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ-ன் அதிகாரப்பூர்வமாக கசிந்த ரெண்டர்களில், முன்புற கேமரா சென்சார் வைக்க முன்பக்கத்தில் சென்டர் பொசிஷன் செய்யப்பட்ட பஞ்ச் ஹோல் கட்அவுட்டை வெளிப்படுத்தியது.

12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி
மறுபுறம் வெளியான தகவலின்படி 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.55,980 ஆக இருக்கும் எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி விலை இந்திய மதிப்புப்படி ரூ.59797 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் முந்தைய அறிக்கைப்படி சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஆனது இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.45900 மற்றும் ரூ.52450 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ முக்கிய விவரங்களை சாம்சங் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சிறந்த கேமரா அம்சங்களோடு வருகிறது.


Click it and Unblock the Notifications