விரைவில் இந்தியாவில் வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ- இரண்டு வேரியண்ட், முழு எச்டி+ டிஸ்ப்ளே!

|

தென்கொரிய தொழில்நுட்ப நிறுவனமான கேலக்ஸி எஸ்21 எஃப்இ சாதனம் ஜனவரி 2022 முதல் வாரத்தில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் அதன் அறிவிப்பு வெளியான ஒரே மாதத்தில் பல சந்தைகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய பதிப்பு குறித்த சில முக்கிய விவரக்குறிப்புகள் ஆன்லைனில் வெளியாகியுள்ளன.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனின் விவரங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனின் விவரங்கள்

91 மொபைல்ஸ் உடன் இணைந்து அறியப்பட்ட விவரங்களை டிப்ஸ்டர் இஷான் அகர்வால் இந்த விவரங்களை வெளியிட்டுள்ளார். இந்திய சந்தையிலும் இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என டிப்ஸ்டர் தகவல் தெரிவிக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனின் விவரங்கள் ஆன்லைனில் தொடர்ந்து கசிந்து வருகின்றன. இந்த தகவல் குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ கசிந்த தகவலை பார்க்கலாம், சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஸ்மார்ட்போனானது எக்ஸினோஸ் 2100 சிப்செட் மூலம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படலாம் எனவும் இரண்டு சேமிப்பு கட்டமைப்புகளில் இது வரக்கூடும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் அடுத்ததாக 8 ஜிபி ரேம் உடன் இரண்டாவது வேரியண்ட் ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்த வேரியண்டில் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி இருக்கும் என கூறப்படுகிறது. வரவிருக்கும் சாம்சங் ஸ்மார்ட்போனானது கிராஃபைட், ஆலிவ், வயலெட் மற்றும் வைட் ஆகிய நான்கு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது.

ஃபிளாக்ஷிப் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

ஃபிளாக்ஷிப் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

முந்தைய தலைமுறை ஃபிளாக்ஷிப் சாம்சங் ஸ்மார்ட்போன்களை போன்றே, கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஆனது உலகளாவிய சந்தைகளில் எக்ஸினோஸ் 2100 எஸ்ஓசி பயன்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படும் அதே சமயத்தில் அமெரிக்க மற்றும் சீனா ஸ்மார்ட்போன் வகைகளில் கேலக்ஸி எஸ்21 உள்ள பிற சாதனங்களை போன்றே குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஓசி மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சாதனத்தின் சிறப்பம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சாதனத்தின் சிறப்பம்சங்கள்

முந்தைய அறிக்கைகளின் படி, சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சாதனமானது 6.4 இன்ச் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. ஓஐஎஸ் உடன் 12 எம்பி முதன்மை கேமரா சென்சார், 12 எம்பி இரண்டாம் நிலை அல்ட்ரா வைட் லென்ஸ் மற்றும் ஓஐஎஸ் உடன் 8 எம்பி மூன்றாம் நிலை கேமரா என டெலிஃபோட்டோ லென்ஸ் உடன் கூடிய மூன்று பின்புற கேமராக்கள் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் முன்பக்கத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் வசதி

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் வசதி

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் வசதியோடு இந்த ஸ்மார்ட்போன் ஒன் யூஐ இன் சமீபத்திய பதிப்புடன் இந்த சாதனம் வரும் என கூறப்படுகிறது. மேலே குறிப்பிட்டுள்ளபடி ஸ்னாப்டிராகன் அல்லது எக்ஸினோஸ் சிப்செட் 8 ஜிபி வரை ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் என கூறப்படுகிறது. அதோடு இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் எனவும் இது 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரிவர்ஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. தற்போது வரை வெளியான இந்த தகவல் அனைத்தும் அறியப்பட்டவையே ஆகும். விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கப்படும் எனவும் இந்த சாதனத்தின் இந்திய அறிமுக தேதி வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung galaxy S21 FE Might be launching Soon in India- Expected Specs.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X