ஜனவரி உறுதி: தயாரா?- உயர்தர அம்சங்களோடு வெளியாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ!

|

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ-ன் வாரிசாக சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த வெளியீடு அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சிஇஎஸ் 2022-ல் அதிகாரப்பூர்வமாக வரும் என கூறப்படுகிறது. ஜனவரி 5 முதல் ஜனவரி 8-க்கு இந்த அறிமுகம் இருக்கலாம் என கூறப்படுகிறது. சாம்சங் இந்த அறிமுகத்தை அதிகாரப்பூரவமாக உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வரவிருக்கும் சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் அம்சங்கள் குறித்து பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ-ன் இந்தியா வெளியீட்டு காலவரிசை வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ உலகளாவிய அறிவிப்பின் அதே சமயத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும் என தொழில்துறை ஆதாரங்களை பிரத்யேமாக அறிவித்த 91மொபைல்ஸ் வெளியிட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி மாதத்தில் நாட்டில் கிடைக்கும் என கூறப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி வெளியிடப்படவில்லை. இந்தியாவில் பிளாக், க்ரீன் இளஞ்சிவப்பு மற்றும் வைட் வண்ண விருப்பங்களில் ஸ்மார்ட்போன் வரும் என அறிக்கை தெரிவிக்கிறது.

அதிகாரப்பூர்வமாக கசிந்த தகவல்

அதிகாரப்பூர்வமாக கசிந்த தகவல்

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 எஃப்இ-ன் அதிகாரப்பூர்வமாக கசிந்த ரெண்டர்களில், முன்புற கேமரா சென்சார் வைக்க முன்பக்கத்தில் சென்டர் பொசிஷன் செய்யப்பட்ட பஞ்ச் ஹோல் கட்அவுட்டை வெளிப்படுத்தியது. யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் ஸ்பீக்கர் கிரில் இருக்கும் எனவும் பின்புறத்தில் ஸ்மார்ட்போன் மூன்று கேமரா அமைப்புடன் வரும் எனவும் கூறப்படுகிறது.

6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே

இந்த ஸ்மார்ட்போன் 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வரும். இந்த ஸ்மார்ட்போனானது இன்-ஹவுஸ் எக்ஸினோஸ் 2100 எஸ்ஓசி அல்லது ஸ்னாப்டிராகன் 888 செயலி மூலம் இயக்கப்படும் எனவும் இது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வரும் எனவும் கூறப்படுகிறது.

கேமரா அம்சங்களின் விவரங்கள்

கேமரா அம்சங்களின் விவரங்கள்

கேமரா அம்சங்களை பொறுத்தவரையில், 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளடக்கிய டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரும் என கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமராவைக் கொண்டிருக்கும் எனவும் இது ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் இயக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. பாதுகாப்பு அம்சத்துக்கு இன் டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனர் வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை 6, யூஎஸ்பி டைப் சி ஆதரவோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ எதிர்பார்க்கப்படும் விலை குறித்து ஆன்லைனில் டிப் செய்யப்பட்டுள்ளது. இதன் ஐரோப்பிய சந்தைக்கான விலை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு

8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை இந்திய மதிப்புப்படி ரூ.55,980 ஆக இருக்கும் எனவும் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதி விலை இந்திய மதிப்புப்படி ரூ.59797 ஆக இருக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் முந்தைய அறிக்கைப்படி சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ ஆனது இந்திய மதிப்புப்படி சுமார் ரூ.45900 மற்றும் ரூ.52450 ஆக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ முக்கிய விவரங்களை சாம்சங் பகிரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ சிறந்த கேமரா அம்சங்களோடு வருகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 FE Might be Launching on January in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X