ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் வெளிவரும் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன்.!
சாம்சங் நிறுவனம் தனது புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன் மாடலை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதாவது இந்த ஸ்மார்ட்போன் 2022 ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ விவரங்கள் சமீபத்தில் சாம்சங் சர்வெரில் இடம்பெற்று இருந்தது.

அதன்படி ஒன் யு.ஐ. 4 சார்ந்த ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதியுடன் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 15 வரையிலான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது.

அதேபோல் முந்தைய தகவலின்படி, சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரிகார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி அல்லது எக்ஸிநோஸ் 2100 சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு சிப்செட் வசதியுமே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி வேகமாக செயல்படும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.1, GPS, USB Type-C போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ மாடல்.

அதேபோல் இந்த சாதனத்தின் விலை ஐரோப்பாவில் 660 யூரோக்கள் மற்றும் 705 யூரோக்கள் என நிர்ணயம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இந்த கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ சாதனம் இந்திய சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்றுதான் கூறவேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி
மேலும் இந்நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகாப்பார்ப்போம். சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்க இன்பினிட்டி-வி எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக
கொண்டு வெளிவந்துள்ளது எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இந்த புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும்ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளதுசாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல்.

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாச ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைஃபை 802.11, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின்
விலை $249.99 (இந்திய மதிப்பில் ரூ.18,700) ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications