விரைவில் அறிமுகமாகும் அசத்தலான சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன்.!

|

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது வரும் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்படும் என சாம்சங் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் தனித்துவமான அம்சங்களுடன் சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ

குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன் வெளிவரும்.

மெல்ல., மெல்ல., முடியல- முக்கியமான மூன்று திட்டங்களை நீக்கிய ஜியோ: தினசரி டேட்டா திட்டமாச்சே!மெல்ல., மெல்ல., முடியல- முக்கியமான மூன்று திட்டங்களை நீக்கிய ஜியோ: தினசரி டேட்டா திட்டமாச்சே!

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ

இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று கூறப்படுகிறது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது.

வெறும் ரூ.799 இருந்தா பேசிக் போன் வாங்கலாம்.. 'இவ்வளவு' இருந்தா ஸ்மார்ட்போனே வாங்கலாம்.. சூப்பர்ல..வெறும் ரூ.799 இருந்தா பேசிக் போன் வாங்கலாம்.. 'இவ்வளவு' இருந்தா ஸ்மார்ட்போனே வாங்கலாம்.. சூப்பர்ல..

கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ

கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போன் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி அல்லது எக்ஸிநோஸ் 2100 சிப்செட் வசதி இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த இரண்டு சிப்செட் வசதியுமே கேமிங் உட்பட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி வேகமாக செயல்படும். மேலும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

டாப் லெவல்., சரியான விலை- 108 எம்பி கேமரா, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகமான ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ!டாப் லெவல்., சரியான விலை- 108 எம்பி கேமரா, 66 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் உடன் அறிமுகமான ஹானர் 60, ஹானர் 60 ப்ரோ!

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போனி

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். 5G, 4G LTE, டூயல்-பேண்ட் Wi-Fi, புளூடூத் 5.1, GPS, USB Type-C போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்எஇ மாடல். மேலும் இந்நிறுவனம சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..இனி ஸ்மார்ட்போன் டிஸ்பிளே உடையும் என்ற பயம் வேண்டாம்.. விஞ்ஞானிகளின் புதிய தீர்வு.. அல்ட்ராஹார்ட் கிளாஸ்..

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் இன்பினிட்டி-வி எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுவெளிவந்துள்ளது எனவே இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும்.

இதை நீங்களும் செய்யாதீங்க- அக்டோபரில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கு தடை!இதை நீங்களும் செய்யாதீங்க- அக்டோபரில் மட்டும் 20 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்களின் வாட்ஸ்அப் கணக்கு தடை!

கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில்

இந்த புதிய கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின்பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

அப்படி என்ன இருக்கு இந்து போன்ல- மீண்டும் விலை உயர்வு பெற்ற ரியல்மி சி11 (2021): வரவேற்பு அமோகமா இருக்கே!அப்படி என்ன இருக்கு இந்து போன்ல- மீண்டும் விலை உயர்வு பெற்ற ரியல்மி சி11 (2021): வரவேற்பு அமோகமா இருக்கே!

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மா

இந்த சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாச ஸ்மார்ட்போன் மாடல். மேலும் வைஃபை 802.11, 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டுள்ளதுசாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி மாடல்.

விலை உயர்வா அறிவிக்கிறீங்க?இதான் சந்தர்ப்பம்: ஆரம்பிக்கலாங்களா-இந்தியா முழுவதும் 4ஜி சேவை வழங்கும் பிஎஸ்என்எல்விலை உயர்வா அறிவிக்கிறீங்க?இதான் சந்தர்ப்பம்: ஆரம்பிக்கலாங்களா-இந்தியா முழுவதும் 4ஜி சேவை வழங்கும் பிஎஸ்என்எல்

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி

சாம்சங் கேலக்ஸி ஏ13 5ஜி ஸ்மார்ட்போனின் விலை $249.99 (இந்திய மதிப்பில் ரூ.18,700) ஆக உள்ளது. பின்பு டிசம்பர் 3 ஆம் தேதி முதல் இந்த ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் அனைத்து நாடுகளிலும் அறிமுகம் செய்யப்படும் எனஎதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 FE Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X