வாங்கலாமா? ஆரம்பமே சலுகையோடு- சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி இந்தியாவில் அறிமுகம்: 120ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே!
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் திங்களன்று அறிமுகம் செய்யப்பட்டது. இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட கேலக்ஸி எஸ்20 5ஜி ஸ்மார்ட்போனின் வாரிசாகும். இது வழக்கமான கேலக்ஸி எஸ்21 சாதனத்தின் மாறுபட்ட பதிப்பாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் ஆனது மூன்று பின்புற கேமராக்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி சாதனத்தின் இந்திய மாறுபாடு எக்ஸினோஸ் 2100 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனை நான்கு வெவ்வேறு வண்ண விருப்பங்களில் வாங்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி சாதனம் இந்தியாவில் ஒன்பிளஸ் 9 மற்றும் அசுஸ் ஆர்ஓஜி போன் 5 சாதனத்துக்கு போட்டியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி சாதனத்தின் விலை மற்றும் அம்சங்கள் குறித்த தகவல்களை பார்க்கலாம். சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி சாதனத்தின் 128 ஜிபி வேரியண்ட் விலை ரூ.54,999 ஆக இருக்கிறது அதேபோல் 256 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.58,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன்களானது கிராஃபைட், லாவெண்டர், ஆலிவ் மற்றும் வைட் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஜனவரி 11 முதல் விற்பனைக்கு வரும் எனவும் இதை அமேசான் சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆன்லைன் போர்ட்டல்களில் வாங்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதனத்தின் வெளியீட்டு சலுகைகள்
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி சாதனத்தின் வெளியீட்டு சலுகைகள் குறித்து பார்க்கையில், இந்த சாதனத்தின் எச்டிஎஃப்சி பேங்க் பரிவர்த்தனைகளுக்கு ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த சாதனத்தை ரூ.49,999 என கிடைக்கிறது. இந்த கேஷ்பேக் ஜனவரி 17 ஆம் தேதி வரை வழங்கப்படுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது
சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 12 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.4 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டைனமிக் அமோலெட் 2எக்ஸ் டிஸ்ப்ளே உடன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 240 ஹெர்ட்ஸ் டச் மாதிரி விகிதத்தை கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸால் மூலம் பாதுகாக்கப்படுகிறது.

12 மெகாபிக்சல் முதன்மை கேமரா
இது சாம்சங் 5 என்எம் எக்ஸினோஸ் 2100 எஸ்ஓசி மற்றும் 8 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் கேமரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 12 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் ஷூட்டர் மற்றம் 8 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமராவுடன் வருகிறது.

செல்பி மற்றும் வீடியோ வசதி
செல்பி மற்றும் வீடியோ வசதிக்கென இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 32 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போனானது 128 ஜிபி மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இணைப்பு விருப்பங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 6, யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகிய ஆதரவோடு வருகிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்21 எஃப்இ 5ஜி ஸ்மார்ட்போன் ஐபி 68 சான்றளிக்கப்பட்ட கட்டமைப்புடன் வருகிறது. இது தூசி மற்றும் நீர் எதிர்ப்பு ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 25 வாட்ஸ் சூப்பர் ஃபாஸ்ட் வயர்டு சார்ஜிங் 15 வாட்ஸ் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் 4500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications