Home
Mobile

சத்தமின்றி கேலக்ஸி எஸ்21 5ஜி ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்த சாம்சங்.!

கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடல் ஆனது ஜப்பான் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடல் பேண்டம் புளூ பேக் பேனல் மற்றும் கோல்டு அக்சென்ட்களை கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன்

கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன்

மேலும் இந்த சாதனத்தின் பின்புறம் ஒலிம்பிக் லோகோ இடம்பெற்றுள்ளது. பின்பு கேம்ஸ் எடிஷன் மாடலின் விலையை வெளியிடவில்லை அந்நிறுவனம். குறிப்பாக கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் விற்பனை ஜூன் மாத வாக்கில் துவங்கும் என கூறப்படுகிறது. இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடலின் சிறப்பம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

6.2-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

6.2-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே

சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் ஆனது 6.2-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு எச்டிஆர்10+ ஆதரவு, 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி

ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி

குறிப்பாக கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடலில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. பின்பு ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இட

கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடலில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

 10எம்பி செல்பீ கேமரா

10எம்பி செல்பீ கேமரா

சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடலின் பின்புறம் 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 12எம்பி பிரைமரி டூயல் பிக்சல் சென்சார் + 64எம்பி hybrid optic 3x zoom லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதுதவிர செல்பீகளுக்கும், வீடியோ அழைப்புகளுக்கும் என்றே 10எம்பி செல்பீ கேமரா ஆதரவு இவற்றுள் அடக்கம்.

 வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடல்.

4000 எம்ஏஎச் பேட்டரி

4000 எம்ஏஎச் பேட்டரி

சாம்சங் கேலக்ஸி எஸ்21 5ஜி ஒலிம்பிக் கேம்ஸ் எடிஷன் மாடலில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின் எடை 171 கிராம் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S21 5G Olympic Games Edition Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X