Home
Mobile

சியோமிக்கு டாட்டா காட்டிய Samsung Galaxy S20 Ultra, 108எம்பி குவாட் கேமரா, 40எம்பி செல்பீ கேமரா.

சாம்சங் நிறுவனத்தின் மிரட்டலான கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போன் மாடலுக்கு பிறகு தற்சமயம் கேலக்ஸி எஸ்20 5ஜி, கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி,கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி சாதனங்கள் சான் பிரான்சிஸ்கோ-வில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த கேலக்ஸி எஸ்20 சீரிஸ் மாடல்கள் சிறந்த தொழிலநுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளன.

நிறங்களில் கிடைக்கும்

சாம்சங் கேலக்ஸி எஸ்20 5ஜி சாதனம் ஆனது காஸ்மிக் கிரே, கிளவுட் ப்ளூ மற்றும் கிளவுட் பிங்க் ஆகிய நிறங்களில்கிடைக்கும். அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 5ஜி சாதனம் ஆனது காஸ்மிக் கிரே, கிளவுட் ப்ளூ, காஸ்மிக் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கும். அதன்பின்பு கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி சாதனம் காஸ்மிக் கிரே மற்றும் காஸ்மிக் பிளாக் போன்ற நிறங்களில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே வசதி

டிஸ்பிளே வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவசதியுடன் 563ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவசதியுடன் 525ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளேவசதியுடன் 511ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த மூன்று ஸ்மாரட்போன்களும் எச்டிஆர் 10 + சான்றிதழுடன் 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதத்துடன் வருகின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 5ஜி கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 5ஜி கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா+ 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமராஎல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா+ 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி கேமரா வசதி

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி கேமரா வசதி

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி கேமரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 108எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் 10 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 40எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

கேலக்ஸி எஸ்20 சீரிஸ் சாதனங்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசிதயுடன் 12GB of LPDDR5 ஆரவையும் கொண்டுள்ளது, மேலும் கேலக்ஸி எஸ்20 5ஜி சாதனம் ஆனது 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. இதுதவிர கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி சாதனங்கள் 128ஜிபி/512 உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

பேட்டரி அமைப்பு

பேட்டரி அமைப்பு

கேலக்ஸி எஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 45வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, மேலும் ஜி.பி.எஸ்., கலிலியோ, க்ளோனாஸ், பீடோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த மூன்று கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்கள்.

வியக்கவைக்கும் விலை

வியக்கவைக்கும் விலை

சாம்சங் கேலக்ஸி எஸ்20 5ஜி சாதனத்தின் விலை 999டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.72,000)
சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி சாதனத்தின் விலை 1,999டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.85,000)
சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி சாதனத்தின் விலை 1,399டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.100,000)

More from GizBot

Best Mobiles in India

English summary
Samsung Launches Galaxy S20 Series At Unpacked 2020 Event: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X