சாம்சங் ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்பவர்களுக்கு இப்படியொரு சலுகையா?

|

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி எஸ்20, கேல்கஸி எஸ்20 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இ-வவுச்சர் சலுகையை அறிவித்துள்ளது. குறிப்பாக மே4-ம் தேதி முதல் மே20 வரை தங்கள் எஸ்20 ஸ்மார்ட்போன்களை வாங்கி செயல்படுத்தும் வாடிக்கையாளர்கள் மின்(இ)-வவுச்சருக்கு தகுதியுடையவர்கள். இந்த வவுச்சர்கள் samsung.com கிடைக்கும் மற்றும் இதனை வேறு எந்த கேலக்ஸி தயாரிப்புகளையும் வாங்க பயன்படுத்தலாம்.

ரூ.6000வரை கேஷ்பேக்

மேலும் முன்பே முன்பதிவு செய்த எஸ்20 வாடிக்கையாளர்கள் இந்தியாவில் கேலக்ஸி எஸ்20,கேலக்ஸி எஸ்20 பிளஸ் மற்றும்
கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா வாங்கும்போது மேம்படுத்தல் சலுகைகளுடன் ரூ.5000 வரை கூடுதல் போனஸைப் பெறலாம். மாற்றாக
எச்டிஎம் வங்கி கார்டுகள் வழியாக ஸ்மார்ட்போன் வாங்கப்பட்டால் அவர்கள் ரூ.6000வரை கேஷ்பேக் பெறமுடியும்.

கேலக்ஸி எஸ்20பிளஸ் மற்றும் எஸ்20 அல்ட்ரா

கேலக்ஸி எஸ்20பிளஸ் மற்றும் எஸ்20 அல்ட்ரா முன்பதிவு செய்பவர்களுக்குரூ.11990 மதிப்புள்ள கேலக்ஸி பட்ஸ்+ ரூ.1999 விலைக்கு பெறலாம் மற்றும் கேலக்ஸி S20 ப்ரீ-புக்கிங் வாடிக்கையாளர்கள் கேலக்ஸி பட்ஸ்+ ஐ 2999 ரூபாயில் பெறலாம். இந்த சலுகையை ஜூன் 15 க்குள் ரீடீம் செய்யலாம்.

பின்பு கேலக்ஸி எஸ்20பிளஸ் ம்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ப்ரீ-புக்கிங் வாடிக்கையாளர்கள் 3999 ரூபாய் மதிப்புள்ள சாம்சங் கேர்+ சலுகைகளை ரூ.1999 விலையில் பெறலாம். இந்த சலுகையை ஜூன் 15 க்குள் ரீடீம் செய்யப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ பைபர் இருக்கா: அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்!ஜியோ பைபர் இருக்கா: அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்!

பின்பு கேலக்ஸி

ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் கேலக்ஸி எஸ்20 சந்தாதாரர்களுக்கு இரட்டை தரவு நன்மைகளையும் வழங்கும். பின்பு கேலக்ஸி எஸ்20சிரீஸ் வாடிக்கையாளர்கள் டியூப் பிரீமியத்திற்கான நான்கு மாத சந்தாவைப் பெற தகுதியுடையவர்கள்.

கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் விலை ரூ.66,999-ஆக உள்ளது.
கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை ரூ.73,999-ஆக உள்ளது.
கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போனின் விலை ரூ.92,999-ஆக உள்ளது.

 டிஸ்பிளே வசதி

டிஸ்பிளே வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போன் 6.2-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன் 563ppi
பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் ஸ்மார்ட்போன் 6.7-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே வசதியுடன்
525ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா ஸ்மார்ட்போன் 6.9-இன்ச் குவாட் எச்டி பிளஸ் டைனமிக் AMOLED 2X டிஸ்பிளே
வசதியுடன் 511ppi பிக்சல் density ஆதரவைக் கொண்டுள்ளது.

குறிப்பாக இந்த மூன்று ஸ்மாரட்போன்களும் எச்டிஆர் 10 + சான்றிதழுடன் 120 ஹெர்ட்ஸ் ஸ்கிரீன் புதுப்பிப்பு வீதத்துடன் வருகின்றன.

 சாம்சங் கேலக்ஸி எஸ்20 கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா + 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் என மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20பிளஸ் கேமரா வசதி

சாம்சங் கேலக்ஸி எஸ்20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைட் ஆங்கிள் கேமரா+ 64எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 10எம்பி செல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா வசதி

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா வசதி

கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா கேமரா ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 108எம்பி வைட் ஆங்கிள்லென்ஸ் + 48எம்பி டெலிபோட்டோ லென்ஸ் + டெப்த் விஷன் சென்சார் என நான்கு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. மேலும் 40எம்பிசெல்பீ கேமரா எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

அருமையான சிப்செட் வசதி

அருமையான சிப்செட் வசதி

கேலக்ஸி எஸ்20 சீரிஸ் சாதனங்கள் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865சிப்செட் வசிதயுடன் 12GB of LPDDR5 ஆரவையும் கொண்டுள்ளது, மேலும் கேலக்ஸி எஸ்20 5ஜி சாதனம் ஆனது 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியுடன் வெளிவந்துள்ளது. இதுதவிர கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி மற்றும் கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி சாதனங்கள் 128ஜிபி/512 உள்ளடக்க மெமரி ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும்
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

 பேட்டரி அமைப்பு

பேட்டரி அமைப்பு

கேலக்ஸி எஸ்20 5ஜி ஸ்மார்ட்போன் 4000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.கேலக்ஸி எஸ்20பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 4500எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 25வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. கேலக்ஸி எஸ்20 அல்ட்ரா 5ஜி ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி வசதி மற்றும் 45வாட் பாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 10

ஆண்ட்ராய்டு 10

இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது, மேலும் ஜி.பி.எஸ்., கலிலியோ, க்ளோனாஸ், பீடோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை, உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளன இந்த மூன்று கேலக்ஸி ஸ்மார்ட்போன் மாடல்கள்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20 series Pre-Booking Customers get Rs 4000 E-Voucher: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X