சாம்சங் கேலக்ஸி எஸ்20, எஸ் 20 பிளஸ், எஸ் 20 அல்ட்ரா வாங்க சரியான நேரம்: அட்டகாச விலைகுறைப்பு!

|

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியாகும் நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 20, எஸ் 20 பிளஸ் மற்றும் எஸ் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களுக்கு விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 31 வரை மட்டுமே தள்ளுபடி

ஜனவரி 31 வரை மட்டுமே தள்ளுபடி

சாம்சங் கேலக்ஸி எஸ் 21 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகும் நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 தொடர்களுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. சாம்சங் தள்ளுபடி விலைகள் குறித்து பார்ப்பதற்கு முன்னதாக அறிக்கையின்படி, தள்ளுபடி விலை ஆஃப்லைன் சில்லறை கடைகளில் மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த தள்ளுபடியானது ஜனவரி 31 வரை மட்டுமே கிடைக்கும்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 சீரிஸ் தள்ளுபடி விலை

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 சீரிஸ் தள்ளுபடி விலை

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு விலை ரூ.49,999 ஆக உள்ளது. இதன் முந்தைய விலை ரூ.59,499 ஆகும். அதேபோல் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் மாடல் ரூ.56,999-க்கு கிடைக்கிறது. முன்னதாக இந்த மாடலின் விலை ரூ.72,990 ஆக இருந்தது. அதேபோல் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ராவின் விலை ரூ.76,999 ஆக உள்ளது. இதன் முந்தைய விலை ரூ.86,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது அதன் அதிகாரப்பூர்வ மற்றும் இகாமர்ஸ் தளங்களில் அதே விலைக்கு விற்பனை கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அம்சங்கள் குறித்து பார்க்கையில், இது முதன்மை ஸ்மார்ட்போனை விரும்புபவர்களுக்கு சிறந்த தேர்வாகும். இந்த ஸ்மார்ட்போன் க்யூ எச்டி ப்ளஸ் தெளிவுத்திறன், 2கே அமோலெட் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. டிஸ்ப்ளே 2.5டி வளைந்த கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு உள்ளது. கேலக்ஸி எஸ் 20 ஸ்மார்ட்போன் முதன்மை எக்ஸினோஸ் 990 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. 1டிபி வரை மெமரி விரிவாக்க வசதி இதில் இருக்கிறது.

64 எம்பி பிரதான கேமரா

64 எம்பி பிரதான கேமரா

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி டெலிபோட்டோ லென்ஸ், 12 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 12 எம்பி மூன்றாம் நிலை கேமரா இருக்கிறது. மேலும் இதில் 8கே வீடியோ ரெக்கார்டிங், 4கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு இருக்கிறது. மேலும் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 2கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவுடனான 10 எம்பி கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் சாதனம்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் சாதனம்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் ஸ்மார்ட்போனில் எக்ஸினோஸ் 990 எஸ்ஓசி ஆதரவு, 64 எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்ட உயர்ரக அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் எஸ் 20 மாடலை விட எஸ் 20 பிளஸ் சாதனத்தில் பெரிய டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரி ஆதரவு இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா அம்சங்கள் குறித்து பார்க்கையில், இதில் எக்ஸினோஸ் 990 எஸ்ஓசி செயலி உள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா ஸ்மார்ட்போனில் 108 எம்பி டெலிஃபோட்டோ சென்சார், 8கே வீடியோ ரெக்கார்டிங் ஆதரவு உள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ்20, எஸ் 20 ப்ளஸ் சாதனத்துடன் ஒப்பிடுகையில் இதில் வேகமான வயல்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. மேலும் இதில் 5000 எம்ஏஎச் பேட்டரி இருக்கிறது.

Source: newsbytesapp.com

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20, S20 Plus, S20 Ultra Smartphones Getting PriceCut in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X