சாம்சங் கேலக்ஸி சாதனங்களுக்கு அட்டகாச தள்ளுபடி: பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை!

|

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 +, கேலக்ஸி நோட் 10+, கேலக்ஸி டேப் ஏ 8.0 உள்ளிட்ட பல்வேறு சாம்சங் சாதனங்களுக்கு பிளிப்கார்ட் பிக் பில்லியன் தினத்தில் தள்ளுபடிகள் கிடைக்கிறது. அதன் விவரங்கள் குறித்து பார்க்கலாம்.

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனை

பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனை

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 +, கேலக்ஸி நோட் 10+, கேலக்ஸி டேப் ஏ 8.0 மற்றும் கேலக்ஸி ஸ்மார்ட்வாட்ச் போன்ற சாதனங்கள் பிளிப்கார்ட்டின் பிக் பில்லியன் தின விற்பனையில் சலுகையோடு கிடைக்கிறது. முதன்முறையாக பிளிப்கார்ட் பிக் பில்லையன் தினத்தில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி எஃப் 41 ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்படுகிறது.

பண்டிகை கால விற்பனை

பண்டிகை கால விற்பனை

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனை மற்றும் அமேசான் கிரேட் இந்தியன் சேல் ஒரே சமயத்தில் தொடங்குகிறது. பண்டிகை கால விற்பனை தினத்தில் பல்வேறு சாதனங்களுக்கும் இரு நிறுவனங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்குகின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20+

சாம்சங் கேலக்ஸி எஸ் 20+

பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனை தின சலுகையின் ஒரு பகுதியாக சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு அட்டகாச தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. சாம்சங் கேலக்ஸி எஸ் 20+ ஸ்மார்ட்போன் ரூ.77,999 என விற்கப்பட்டது, தற்போது தள்ளுபடி விலையில் ரூ.49,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் விற்பனை தினத்தில் ரூ.28,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.

சாம்சங் கேலக்ஸி நோட்

சாம்சங் கேலக்ஸி நோட்

சாம்சங் கேலக்ஸி நோட் மாடலுக்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் அட்டகாச தள்ளுபடி கிடைக்கிறது. பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனையில் சாம்சங் கேலக்ஸி நோட் 10+ ஸ்மார்ட்போன் ரூ.85,000 முதல் ரூ.54,999 என்ற விலையில் கிடைக்கிறது.

ரூ.5,999-க்கு ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான வாய்ப்பு: குறுகிய காலத்திற்கு மட்டுமே!ரூ.5,999-க்கு ஸ்மார்ட்டிவிகள் வாங்க சரியான வாய்ப்பு: குறுகிய காலத்திற்கு மட்டுமே!

சாம்சங் கேலக்ஸி எஃப் 41

சாம்சங் கேலக்ஸி எஃப் 41

பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனையில் முதன்முறையாக விற்பனைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எஃப் 41 6 ஜிபி + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ.15,499 எனவும் 6 ஜிபி + 128 ஜிபி சேமிப்பின் விலை ரூ.16,499 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 21 ஆம் தேதி பண்டிகை தின விற்பனை முடிந்ததும், சாம்சங் கேலக்ஸி எஃப் 41 6 ஜிபி 64 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.16,999 எனவும் 6ஜிபி ரேம் 128ஜிபி சேமிப்பு வேரியண்ட் ரூ.17,999 எனவும் நிர்ணயிக்கப்படும்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0

பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனையில் சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 8.0 வைஃபை ரூ.9,999 க்கு பதிலாக ரூ.8,999-க்கு விற்பனைக்கு வருகிறது. அதேபோல் தற்போது வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி வாட்ச் 46 மிமீ ப்ளூடூத் வேரியண்ட்டை ரூ.11,990 க்கு பெறலாம். இந்த சாம்சங் வாட்ச்சின் நிர்ணய விலை ரூ.19,990 ஆக இருந்தது. தற்போது ரூ.8000 தள்ளுபடி கிடைக்கிறது.

சாம்சங் இந்தியா வலைதளம்

சாம்சங் இந்தியா வலைதளம்

சாம்சங் இந்தியா தனது ஆன்லைன் ஸ்டோர் மூலம் ஃபெஸ்டிவல் விற்பனையை தொடங்கியுள்ளது. கேலக்ஸி எஸ் 20+ க்கு 40% வரை தள்ளுபடி, வயர்லெஸ் சார்ஜர்கள் மற்றும் ஜேபிஎல் ஸ்பீக்கர்களில் 60% வரை தள்ளுபடி மற்றும் பல்வேறு ஸ்மார்ட் டிவிகளுக்கு 45% வரை தள்ளுபடி வழங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. எச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு 12.5 சதவீம் கேஷ்பேக் கிடைக்கும். சாம்சங் இந்த லைவ் விற்பனை நவம்பர் 16 வரை தொடரும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20+, Galaxy Note 10+, Galaxy Watch Available on Discount Prices in Flipkart Big Billion Days Sale

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X