Samsung கேலக்ஸி எஸ் 20 பிளஸ் எடிஷன் முன்பதிவு துவக்கம்! விலை என்ன தெரியுமா?

|

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் தனது சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பி.டி.எஸ் எடிஷனை, கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் ஸ்மார்ட்போனுடன் இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. அவற்றின் வழக்கமான பதிப்புகளுடன் ஒப்பிடும்போது இரண்டின் அம்சங்களும் அடிப்படையில் ஒன்றாகவே உள்ளது. இருப்பினும், இரண்டு தயாரிப்புகளிலும் புதிய வண்ண மாறுபாடுகள் மற்றும் லோகோக்கள் மாற்றப்பட்டுள்ளது.

கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன்

கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன்

இந்த BTS லோகோ கேலக்ஸி எஸ் 20 பிளஸ் போனின் சேஸ் மற்றும் புதிய கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பி.டி.எஸ் பதிப்பின் கேசில் அச்சிடப்பட்டுள்ளது. கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷனில் சில முன் ஏற்றப்பட்ட பி.டி.எஸ் தீம்கள் கொடுக்கப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் பதிப்பு இன்று முதல் இந்தியாவில் முன்பதிவு செய்யக் கிடைக்கிறது. இந்த புதிய மாடல்களுடன், கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா கிளவுட் ஒயிட் வேரியண்ட் மாடலும் முன்பதிவிற்குக் கிடைக்கிறது.

முன்பதிவு துவக்கம்

முன்பதிவு துவக்கம்

இந்த மூன்று தயாரிப்புகளையும் ஜூலை 1 முதல் ஜூலை 9 வரை சாம்சங்.காம் வலைத்தளம் வழியாக நீங்கள் முன்பதிவு செய்யலாம். சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷனின் விலை ரூ .87,999 மற்றும் கேலக்ஸி பட்ஸ் பி.டி.எஸ் எடிஷனின் விலை ரூ. 14,990 மட்டுமே. மறுபுறம், கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா மாடலின் புதிய வேரியண்ட் ரூ. 97,999 என்ற விலையில் முன்பதிவிற்குக் கிடக்கிறது. கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் சாம்சங் எக்ஸ்குளூசிவ் ஸ்டோர் மற்றும் சிலரை அங்காடியில் கிடைக்கும்.

அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!அனகோண்டாவை கையில் பிடித்த கணவர், கூக்குரலிட்ட மனைவி! எதிர்பாராத விபரீதம் வேடிக்கையானது!

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா வைட் வேரியண்ட்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா வைட் வேரியண்ட்

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா வைட் வேரியண்ட் சாம்சங்கின் சேனல்கள் மூலம் மட்டுமே வாங்க கிடைக்கும். இருப்பினும், கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் மற்றும் கேலக்ஸி எஸ் 20 அல்ட்ரா கிளவுட் ஒயிட் வேரியண்ட் இந்தியாவில் குறைந்த அளவுகளில் மட்டுமே கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது. இந்த தயாரிப்புகள் ஜூலை 10 முதல் விற்பனைக்கு வரும் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ்

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ்

சாம்சங் கேலக்ஸி பட்ஸ் பிளஸ், சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் அம்சங்கள்
கேலக்ஸி பட்ஸ் பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் சிறந்த ஒலி தரத்தை வழங்குகிறது. பட்ஸ் ஏ.கே.ஜியின் ஒலியுடன் சீரான, விரிவான மற்றும் சரவுண்ட் ஒலியை வழங்குகின்றன, மேலும் இது சாலிட் பர்பிள் நிறத்தில் வருகிறது. கூடுதலாக, இது முன்பே ஏற்றப்பட்ட பி.டி.எஸ் லாக் ஸ்கிரீன் டிஸ்பிளே மற்றும் வால்பேப்பருடன் சிறப்பு பர்பிள் எடிஷன் கேஸுடன் வருகிறது.

அட்ராசக்க! iPhone xs max போனுக்கு 'ரூ.40,000' விலை குறைப்பா? எப்படி இதை வாங்குவது?அட்ராசக்க! iPhone xs max போனுக்கு 'ரூ.40,000' விலை குறைப்பா? எப்படி இதை வாங்குவது?

பி.டி.எஸ்-ஈர்க்கப்பட்ட தீம்களுடன் அறிமுகம்

பி.டி.எஸ்-ஈர்க்கப்பட்ட தீம்களுடன் அறிமுகம்

அதேபோல், வழக்கமான கேலக்ஸி எஸ் 20 பிளஸ் மாடல்களுடன் ஒப்பிடும்போது சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷனின் விவரக்குறிப்புகளில் பெரிதான மாற்றம் என்று எதுவும் கிடையாது. இருப்பினும், கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷனில் சிறப்பு வால்பேப்பர்கள், லோகோக்கள் மற்றும் ரிங்டோன்களுடன் பி.டி.எஸ்-ஈர்க்கப்பட்ட தீம்களுடன் வருகிறது என்பதே தனி சிறப்பு.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் விபரக்குறிப்பு

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 பிளஸ் பி.டி.எஸ் எடிஷன் விபரக்குறிப்பு

  • 6.7' இன்ச் இன்ஃபினிட்டி-ஓ டைனமிக் அமோலேட் டிஸ்ப்ளே
  • ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 சிப்செட்
  • 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி வரை சேமிப்பு
  • ஆண்ட்ராய்டு 10
  • 64 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமராவுடன் மூன்று பின்புற கேமரா அமைப்பு
  • 10 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா
  • 5 ஜி (தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தைகள்), 4 ஜி எல்டிஇ,
  • வைஃபை 6
  • புளூடூத் v5.1
  • ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
  • யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
  • 4,500 mAh பேட்டரி

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20+, Galaxy Buds+ BTS Edition Launched In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X