இன்று விற்பனைக்கு வரும் கேலக்ஸி S20 FE.! விலை மற்றும் விபரங்கள்.!

|

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் ஆனது இன்று விற்பனைக்கு வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனை அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர்களில் வாங்க முடியும். மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.4000-வரை தள்ளுபடி கிடைக்கும்.

றிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட

மேலும் நோ காஸ்ட் இஎம்ஐ வசதி, அதாவது வட்டியில்லாமல் மாத தவணை செலுத்தும் வசதி உள்ளது, இந்தத் தவணை முறையில் ப்ராசஸிங் ஃபீஸ், மாதத் தவணைக்கான வட்டி ஆகிய இரண்டையுமே வசூலிக்க மாட்டார்கள்.பின்பு
பழைய மொபைல் போன்களை கொடுத்து எக்ஸ்சேஞ்ச் செய்யும் வசதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனை ரூ.49,999-விலையில் வாங்க முடியும்.

டிசைன் மற்றும் தோற்றம்

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் தோற்றம் சமீபத்திய சாம்சங் கேலக்ஸி Note 20 மாடலை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மிண்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் ஒயிட் போன்ற பல்வேறு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த சாதனம் 5ஜி மற்றும் 4ஜி ஆதரவுடன் வெளிவந்துள்ளது, அதாவது 5ஜி இல்லாத இடத்தில் 4ஜி ஆதரவைப் பயன்படுத்த முடியும்

Vivo Y30 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு: 4 கேமரா, 5000 mAh பேட்டரி!Vivo Y30 ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலைக்குறைப்பு: 4 கேமரா, 5000 mAh பேட்டரி!

வைட்வைன் எல் 1 சான்றிதழ்

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் வைட்வைன் எல் 1 சான்றிதழ் பெற்றது மற்றும் நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற தளங்களில் எச்டி ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது. இதுதவிர வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனுடன் மூன்று மாத யூடியூப் பிரீமியம் சந்தாவை நிறுவனம் இலவசமாக வழங்குகிறது.

ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்கள், ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு போன்ற பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது.

 சாம்சங் கேலக்ஸி S20 FE அம்சங்கள்

சாம்சங் கேலக்ஸி S20 FE அம்சங்கள்

6.5 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே
20: 9 அளவிலான திரை விகிதம்
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவு
4 ஜி மாறுபாட்டில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 SoC
5ஜி மாறுபாட்டில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
ட்ரிபிள் ரியர் கேமராக்கள்
12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்
12எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ்
8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
32 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
முன்பக்க கேமராவிலும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உள்ளது
வைஃபை
ப்ளூடூத் வி 5.0
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
என்எப்சி
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
4,500 எம்ஏஎச் பேட்டரி
15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
எடையில் 190 கிராம்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20 FE Sale Starts Today in India Price Offers And More : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X