அடுத்த வாரம் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன்.!

|

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சாம்சங் கேலக்ஸி எம்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் அடுத்த வாரம் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும். மேலும் ஏற்கனவே இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 4ஜி ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரம் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன்.

அதன்படி 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி S20 FE 4G ஸ்மார்ட்போனை ரூ.49,999-விலையில் வாங்க முடியும். இனி வரும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் ஆனது சற்று உயர்வான விலையில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் தோற்றம் சமீபத்திய சாம்சங் கேலக்ஸி Note 20 மாடலை நினைவுபடுத்துவதாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மிண்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் ஒயிட் போன்ற பல்வேறு வண்ண விருப்பங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் மூன்று பின்புற கேமராக்கள், ஹோல்-பஞ்ச் டிஸ்ப்ளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு போன்ற பிரதான அம்சங்களையும் கொண்டுள்ளது. குறப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் வைட்வைன் எல் 1 சான்றிதழ் பெற்றது மற்றும் நெட்ஃபிக்ஸ் மற்றும் பிரைம் வீடியோ போன்ற தளங்களில் எச்டி ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ சாதனத்தின் பல்வேறு
அம்சங்களைப் பார்ப்போம்.

அடுத்த வாரம் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்20 எப்இ 5ஜி ஸ்மார்ட்போன்.

சாம்சங் கேலக்ஸி S20 FE அம்சங்கள்
6.5 இன்ச் முழு எச்டி + (1,080x2,400 பிக்சல்கள்) சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளே
20: 9 அளவிலான திரை விகிதம்
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு
டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவு
4 ஜி மாறுபாட்டில் ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 SoC
5ஜி மாறுபாட்டில் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 SoC
ட்ரிபிள் ரியர் கேமராக்கள்
12எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் லென்ஸ்
12எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ்
8எம்பி டெலிபோட்டோ லென்ஸ்
32 மெகாபிக்சல் செல்பீ கேமரா சென்சார்
முன்பக்க கேமராவிலும் ஆட்டோஃபோகஸ் ஆதரவு உள்ளது
வைஃபை
ப்ளூடூத் வி 5.0
ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ்
என்எப்சி
யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்
4,500 எம்ஏஎச் பேட்டரி
15W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
எடையில் 190 கிராம்

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20 FE 5G variant to launch in India next week and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X