சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி இந்தியாவில் அறிமுகம்.. சிறப்பு விலை இது தான் மிஸ் பண்ணாதீங்க..
சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. சாம்சங் நிறுவனம் இந்த சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி சிறப்பு அறிமுக விலையின் கீழ் ரூ.8000 கேஷ் பேக் நன்மையுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களைப் பார்க்கலாம்.

புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி
புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போன் கிளவுட் நேவி, கிளவுட் மிண்ட் மற்றும் கிளவுட் லாவெண்டர் என மூன்று வண்ணங்களில் வருகிறது. ஆரம்ப கால சிறப்பு விற்பனையின் ஒரு சலுகையாக இப்போது இந்த புதிய ஸ்மார்ட்போன் வெறும் ரூ. 47999 என்ற விலைக்கு கிடைக்கிறது. இதன் அசல் விலையிலிருந்து ரூ. 8000 குறைக்கப்பட்டுள்ளது. புதிய சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 55,999 ஆகும்.

எங்கே வாங்கலாம்?
மார்ச் 31, 2021 முதல் சாம்சங்.காம், அமேசான்.இன், சாம்சங் பிரத்தியேக கடைகள் மற்றும் முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு கிடைக்கும். சிப்செட்டில் உள்ள வேறுபாட்டைத் தவிர, 5 ஜி பதிப்பு மற்றும் 4 ஜி பாதிப்பு ஆகிய இரண்டு சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ மாடல்களுக்கும் பெரியளவில் வித்தியாசம் என்று எதுவுமில்லை. இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களும் ஒத்த விவரக்குறிப்புகள் மற்றும் அம்சங்களுடன் வருகிறது.

ஃபாஸ்ட் சார்ஜிங்
கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 செயலி மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. இது வயர்லெஸ் பவர் ஷேர் மற்றும் வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் 2.0 ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது 25W சூப்பர்-ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. இது மேம்பட்ட நாக்ஸ் பாதுகாப்புடன் எண்டு-தி-எண்டு என்க்ரிப்ஷன் வன்பொருள் மற்றும் மென்பொருள் பாதுகாப்பை உறுதி செய்கிறது.

டிஸ்பிளே விபரம்
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 1 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவுடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் அமோலட் இன்பினிட்டி-ஓ டிஸ்பிளேவுடன், 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் மற்றும் 240 ஹெர்ட்ஸ் டச் ரிப்போர்ட் வீதத்துடன் வருகிறது. டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 30 எக்ஸ் ஸ்பேஸ் ஜூம் இடம்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா
இது 12 மெகா பிக்சல் அல்ட்ரா வைடு ஆங்கிள் சென்சார், 12 மெகா பிக்சல் வைடு ஆங்கிள் சென்சார் மற்றும் 8 மெகா பிக்சல் டெலிபோட்டோ லென்ஸ் ஆகியவற்றுடன் வருகிறது. இதில் 32 மெகா பிக்சல் கொண்ட செல்பி கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








