Samsung Galaxy S20 FE 5G: மார்ச் 30ல் அறிமுகமாகும் சாம்சங்கின் அடுத்த 5ஜி ஸ்மார்ட்போன் இது தான்..
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி இந்தியா வெளியீடு மார்ச் 30 ஆம் தேதிக்கு அமைக்கப்பட்டுள்ளது என்று நிறுவனம் ட்விட்டரில் ஒரு பதிவு மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தஸ்மார்ட் போனின் பதிவு பக்கம் சாம்சங் இந்தியா இணையதளத்தில் 'Notify me' பட்டனை கொண்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் 4 ஜி மற்றும் 5 ஜி வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டது, ஆனால் 4 ஜி மாறுபாடு மட்டுமே அக்டோபரில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி
சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி இந்தியாவில் ஸ்னாப்டிராகன் செயலியுடன் அறிமுகம் செய்யப்படும், இது 4 ஜி வேரியண்ட்டைப் போலல்லாமல் எக்ஸினோஸ் 990 சிப்செட் உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி S20 FE 5G செவ்வாய்க்கிழமை, மார்ச் 30 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் மற்றும் அதே நாளில் விற்பனைக்கு வரும்.

விலை என்னவாக இருக்கும்?
சாதனம் வாங்க ஆர்வமுள்ளவர்கள், சாம்சங் இந்தியா இணையதளத்தின் மூலமும் பதிவு செய்யலாம். சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி அமெரிக்காவில் 699 டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய மதிப்பின் படி தோராயமாக சுமார் ரூ. 51,400 ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி சிறப்பம்சம்
அக்டோபர் 2020 இல் அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட சாம்சங் எஸ் 20 எஃப்இ 5 ஜி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 856 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது டூயல் நானோ சிம் + இசிம் ஆதரவுடன் சாதனம் ஆண்ட்ராய்டு 11 இல் இயங்கும் சாம்சங்கின் ஒன் யுஐ 3.0 உடன் இயங்குகிறது. இது 6.5-இன்ச் ஃபுல்-எச்டி + உடன் கூடிய 2,400 x 1,080 பிக்சல்கள் கொண்ட சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்ப்ளேவுடன், 407 பிபிஐ பிக்சல் அடர்த்தியையும் கொண்டுள்ளது.

கேமரா அம்சம்
ஸ்மார்ட்போனில் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது, இது 12 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார் மற்றும் 123 டிகிரி பார்வைக் களம் கொண்ட 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டரைப் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ காலிங்களுக்கு, சாம்சங் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ 5 ஜி 32 மெகாபிக்சல் முன்பக்க கேமரா உடன் வருகிறது. இது செல்பி கேமராவிலும் ஆட்டோ ஃபோகஸ் ஆதரவு உள்ளது.

பேட்டரி அம்சம்
சாம்சங் எஸ் 20 எஃப்இ 5 ஜி வைஃபை, புளூடூத் வி 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஆனால் 3.5 mm ஆடியோ ஜாக் இதில் இல்லை. கைரேகை சென்சார், கைரோ சென்சார், ஹால் சென்சார், லைட் சென்சார் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவற்றுடன், 15W பாஸ்ட் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் 4,500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. வயர்லெஸ் பவர் ஷேரிங் அம்சத்தையும் இந்த ஸ்மார்ட்போன் ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications