Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போனின் புதிய வேரியண்ட் மாடல் அறிமுகம்.! விலை என்ன தெரியுமா?

|

சாம்சங் நிறுவனம் இன்று தனது Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போனின் 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் கேலக்ஸி எஸ் 20 எஃப்இ ஸ்மார்ட்போனின் 128 ஜிபி வேரியண்ட் மாடலை ரூ. 49,999 விலையில் அறிமுகப்படுத்தியது, இது இன்று அக்டோபர் 16ம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன்

Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன்

Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன் கிளவுட் நேவி, கிளவுட் ரெட், கிளவுட் லாவெண்டர், கிளவுட் மிண்ட் மற்றும் கிளவுட் ஒயிட் வண்ண விருப்பங்களில் வருகிறது. அதேபோல், நிறுவனம் இன்று அறிமுகம் செய்துள்ள புதிய 256 ஜிபி வேரியண்ட் மாடல் அக்டோபர் 17ம் தேதி முதல் சாம்சங்.காம் மற்றும் முன்னணி ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் சில்லறை கடைகள் வழியாக முன்பதிவிற்குக் கிடைக்கிறது. அக்டோபர் 28 முதல் ஷிப்பிங் செய்யப்படுகிறது.

சலுகைகள்

சலுகைகள்

எச்.டி.எஃப்.சி வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு ரூ .4,000 கேஷ்பேக் மற்றும் சாம்சங் இ-ஸ்டோரில் ரூ .4,000 வவுச்சர் உள்ளிட்ட சலுகைகள் Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன் வாங்கும்போது வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. புதிய 256 ஜிபி வேரியண்ட் மாடல் ரூ. 53,999 விலையில், 6.5' இன்ச் எஃப்.எச்.டி பிளஸ் சூப்பர் அமோலேட் இன்ஃபினிட்டி-ஓ டிஸ்பிளேயுடன் வருகிறது.

டிஸ்பிளே & ஸ்டோரேஜ்

டிஸ்பிளே & ஸ்டோரேஜ்

இந்த டிஸ்பிளே 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 20: 9 விகித அளவு மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. Samsung Galaxy S20 FE, ஆக்டா கோர் எக்ஸினோஸ் 990 சிப்செட் உடன், 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி சேமிப்பகத்துடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் அம்சமும் உள்ளது. இதன் வழியாக 1TB ஸ்டோரேஜ் வரை விரிவாக்கிக்கொள்ளலாம்.

கேமரா

கேமரா

Samsung Galaxy S20 FE ஸ்மார்ட்போன், ட்ரிபிள் கேமரா அமைப்புடன் 12 மெகாபிக்சல் வைடு ஆங்கிள் கேமராவுடன், 12 மெகாபிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ ஷூட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தில், செல்ஃபி அனுபவத்திற்காக 32 மெகாபிக்சல் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங்

Samsung Galaxy S20 FE எடிஷன் ஸ்மார்ட்போன் 4500 எம்ஏஎச் பேட்டரியுடன் கூடிய 25W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் ரிவர்ஸ் வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுடன் வழங்குகிறது. இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் உடன் Samsung Galaxy S20 FE வருகிறது. புதிய ஸ்மார்ட்போன் IP68 சான்று பெற்ற டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் அம்சத்தைக் கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S20 FE 256GB Storage Variant Launched In India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X