Home
Mobile

இரட்டிப்பு சந்தோஷம் கொடுக்க வரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

By Super
இரட்டிப்பு சந்தோஷம் கொடுக்க வரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்!

ஆயிரம் மொபைல் நிறுவனங்கள் இருந்தாலும், மொபைல் என்று சொன்ன உடன் சில நிறுவனங்கள் தான் பளிச்சென்று நினைவுக்கு வருகிறது. அந்த சில பெயர்களில் நிச்சயம் சாம்சங் நிறுவனத்தின் பெயரும் முதலில் வந்துவிடும்.

தன்னுடைய அசத்தலான தயாரிப்பில் அனைத்து வாடிக்கையாளர்களையும் தன் பக்கம் திரும்ப வைத்த நிறுவனம் சாம்சங்.

வாடிக்கையாளர்களுக்கு புதியதோர் உணர்வை கொடுக்க கேலக்ஸி வரிசையில் எஸ்-II டியோஸ் என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது சாம்சங். இந்த ஸ்மார்ட்போனுக்கு சாம்சங் ஐ-929 என்ற பெயரும் உண்டு. இது அற்புதமாக 4.5 இஞ்ச் திரை வசதி கொண்டது. வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு தக்கவாறு இதில்

டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இந்த பிராசஸர் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். இந்த பிராசஸர் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க மிகவும் ஏதுவாக இருக்கும். சூப்பர் என்று சொல்ல வைக்க இதில் சூப்பர் அமோல்டு ப்ளஸ் டபிள்யூஜிஏ திரை வசதியும் உள்ளது. டியூவல் கேமரா என்றாலே, கேமராவின் மூலம் அதிக வசதியினை பெறலாம் என்பது சாத்தியம். அதிலும் அந்த இரண்டு கேமராக்களில் ஒன்று 8 மெகா பிக்ஸல் கேமரா என்றால் அதன் சவுகரியத்தை கேட்கவே வேண்டியதில்லை.

இந்த உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட கேமராவின் மூலம் சிறந்த புகைப்படம், வீடியோ ரெக்கார்டிங் போன்றவற்றை எளிதாக பெறலாம். இதன் செகன்டரி கேமரா 2 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டது. 16ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன், 32ஜிபி வரை மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட் வசதியையும் கொடுக்கும்.

இந்த புதிய கேலக்ஸி எஸ்-II டியோஸ் சிடிஎம்ஏ-2000 மற்றும் ஜிஎஸ்எம் பேண்டு தொழில் நுட்பம் கொண்டது. வைபை வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 1800 எம்ஏஎச் ஆற்றல் வாய்ந்த பேட்டரியை பெற்றுள்ளது.

முன்பெல்லாம் ஒரு மொபைல் பற்றி தெரிந்து கொள்ள அந்த மொபைல் கடைகளுக்கு தேடி போய் பார்க்க வேண்டியது இருக்கும். ஆனால் இன்று ஒரு மொபைல் விற்பனை சந்தைக்கு வருவதற்கு முன்பே அதன் தொழில் நுட்பங்கள் அனைத்தும் வெளியாகிவிடுகின்றன.

சாம்சங் கேலக்ஸி எஸ்-II டியோஸ் ஸ்மார்ட்போனின் விலை

அறிவிக்கப்படவில்லை. ஆனால், இந்த ஸ்மார்ட்போன் நிச்சயம் மற்ற டியூவல் சிம் மொபைல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X