கேலக்ஸி எஸ்-2 மற்றும் எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super
|
கேலக்ஸி எஸ்-2 மற்றும் எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

கேலக்ஸி ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வாடிக்கையாளர்களின் மனதில் சிறந்த இடத்தை பிடித்துள்ளது சாம்சங். கேலக்ஸி எஸ்-2 மற்றும் கேலக்ஸி எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றி சிறிய ஒப்பீட்டை இங்கே பார்ப்போம்.

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் 4.3 திரை வசதியின் மூலம் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும். ஆனால் எஸ்-2 ஸ்மார்ட்போனையும் விட கேலக்ஸி எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போன் சற்று குறைந்த திரையினை கொண்டுள்ளது. எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போனில் 4.0 இஞ்ச் திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் திரை

துல்லியத்தினை பெற முடியும்.

எஸ்-2 ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு வி2.3.4 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் ஆப்கிரேடடு வெர்ஷனாக ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினையும் பெற முடியும். எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போன் வி2.3 ஜின்ஜர்பிரெட் இயங்குதளத்தில் இயங்கும்.

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனின் இயங்குதளம் சிறப்பாக இயங்க இதில் டியூவல் கோர் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போனில் உள்ள கேமராவினை விட, கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் அதிக கேமரா சவுகரியத்தினை வழங்கும்.

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் கொண்டது. எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போன் 1.9 முகப்பு கேமராவினையும், 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் வழங்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படத்தினையும், வீடியோ ரெக்கார்டிங்

வசதியினையும் மிக தெளிவாக பெறலாம்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் மெமரியையும் 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள முடியும். கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன் 2ஜி மற்றும் 3ஜி நெட்வொர்கிங் வசதியினையும் பெற முடியும். ஆனால் எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போன் கொஞ்சம் கூடுதலாக 4ஜி நெட்வொர்க் தொழில் நுட்பத்திற்கும் எளிதாக சப்போர்ட் செய்யும்.

இந்த ஸ்மார்ட்போன்களின் 3.5 எம்எம் ஜேக் மூலம் பிசி கம்ப்யூட்டர்களில் ஹெட்போனை இணைத்து இனிமையாக ஆடியோ வசதியினை பயன்படுத்த முடியும். கேலக்ஸி எஸ்-2 மற்றும் கேலக்ஸி எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்டபோன்களில் சிறந்த தொழில் நுட்ப வசதிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் ஆற்றல் கொண்ட பேட்டரியும் உள்ளது.

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனை ரூ.1,650 எம்ஏஎச் பேட்டரியும், எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு எல்-அயான் பேட்டரியும் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சிறந்த டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமிற்கு எளிதாக இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் சப்போர்ட் செய்யும்.

கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போனை ரூ.28,000 விலையில் பெறலாம். ஆனால் கேலக்ஸி எக்ஸிலரேட்ஸ் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தின் முடிவல் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X