TRENDING ON ONEINDIA
-
டெல்லி உட்பட வட மாநிலங்களை குலுக்கிய நில அதிர்வு.. மக்கள் பீதி
-
டோல்கேட் விஷயத்தில் மோடி எடுத்த அதிரடி முடிவு இதுதான்... லோக்சபா தேர்தல் நெருங்குவதால் மெகா திட்டம்...
-
Yogi Babu:அடம்பிடிக்கும் வடிவேலு: இம்சை அரசன் ஆகும் யோகி பாபு?
-
லெஸ்பியன், கே போன்றோருக்கு எப்படிப்பட்ட பாலியல் ரீதியான பிரச்சினைகள் உண்டாகும்?
-
சென்னை பெரியமேடு லாட்ஜ் படுக்கை அறையில் இரகசிய கேமராகள்.! உஷார் மக்களே
-
முக்கிய வீரர் யார்? கோலியா? தோனியா? முகமது கைஃப் யாரை சொன்னார் தெரியுமா?
-
பாக் பொருளாதாரத்துக்கு நரம்படி கொடுத்த இந்தியா..? Most Favored Nation ஸ்டேட்டஸால் என்ன ஆகும்..?
-
புல்வாமா - தாக்குதல் நடந்தது இப்படி ஒரு அழகான இடத்துலயா? அடக் கடவுளே!
சாம்சங் நிறுவனம் இந்தியாவில் ஏராளமான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றது.
இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருக்கின்றது. புதுமை, வித்தியாசம், வடிவம் உள்ளிட்டவைகளில் சாம்சங் ஸ்மார்ட்போன் தற்போது வித்தியாசமாக முறையில் அறிமுகம் செய்து வருகின்றது.
இந்நிலையில் சாம்சங் கேலக்ஸி எஸ் 10இ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்கின்றது.
5.8இன்ச் திரை:
புதிய கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனில் பன்ச்-ஹோல் ரக டிஸ்ப்ளே கொண்டிருப்பது உறுதியாகியிருக்கிறது. முன்னதாக கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் ரென்டர்கள் இணையத்தில் லீக் ஆகின. அந்த வகையில் புதிய கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் ஸ்கிரீன் வழங்கப்படுகிறது.
வளைந்த ஸ்கிரீன்:
கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களில் வளைந்த ஸ்கிரீன் அமைப்பு வழங்கப்பட்டிருக்கும் நிலையில், புதிய கேலக்ஸி எஸ்10இ மாடலில் ஃபிளாட் ஸ்கிரீன் அமைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனின் விலை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கைரேகை சென்சார்:
இதுதவிர புதிய ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டன் கூடுதலாக கைரேகை சென்சார் போன்று இயங்கும். அந்த வகையில் கேலக்ஸி எஸ்10இ மாடலில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் இடம்பெறவில்லை. ஏற்கனவே கேலக்ஸி ஏ7 (2018) ஸ்மார்ட்போனிலும் கைரேகை சென்சார் பக்கவாட்டில் வழங்கப்பட்டிருக்கிறது.
6ஜிபி ரேம் :
ஸ்மார்ட்போனின் பக்கவாட்டில் பவர் பட்டனுடன் பிக்ஸ்பி சேவையை இயக்க பிரத்யேக பட்டன் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கிறது. கேலக்ஸி எஸ்10இ ஸ்மார்ட்போனில் 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஸ்மார்ட்போன் பிளாக், கிரீன், வைட் மற்றும் எல்லோ உள்ளிட்ட நிறங்களில் வெளியாகும் என தெரிகிறது.