ஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனாது சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2019-ல் தான் அறிமுகம் செய்யப்படும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

|

சாம்சங் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தவண்ணம் உள்ளது, அனால் இந்த முறை புதிய தொழில்நுட்ப அம்சங்களுடன் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.

ஜந்து கேமரா வசதியுடன் வெளிவரும் புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்.!

கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் மற்றும் டூயல் செல்பீ கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது எனத் தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:

கேமரா:

கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள கேமரா அமைப்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் வெளிவரும்
என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தென்கொரிய செய்தி நிறுவனம் இதுகுறித்து பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளது என்பது
குறிப்பிடத்க்கது.

 இந்த கேமராக்களின் சிறப்பம்சம் என்ன?

இந்த கேமராக்களின் சிறப்பம்சம் என்ன?

கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சம் என்னவென்றால் வேரியபிள் அப்ரேச்சர் சென்சார், சூப்பர் வைடு-ஆங்கிள் கேமரா மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் போன்ற அம்சங்களை கொண்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இயக்கத்திற்கு
மிக அருமையாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல்.

120-கோணம்:

120-கோணம்:

இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ள வைடு-ஆங்கிள் கேமரா ஆனது 120-கோணம் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. பின்பு இது
ஐந்து கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எப்போது அறிமுகம்:

எப்போது அறிமுகம்:

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனாது சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2019-ல் தான் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 கேலக்ஸி எஸ்10:

கேலக்ஸி எஸ்10:

மேலும் சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இந்த
ஸ்மார்ட்போன் ஆனாது கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனுக்கு முன்பே அறமுகம் ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புரட்சிகர அம்சங்களை காண முடிகிறது.!

புரட்சிகர அம்சங்களை காண முடிகிறது.!

சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் சில புரட்சிகர அம்சங்களை காண முடிகிறது. கேலக்ஸி எஸ்10 ஆனது முற்றிலும் பெஸல்லெஸ்
ஆக வெளியாகலாம். அதனை தான் எஸ்10 கான்செப்ட்டும் வெளிப்படுத்தியுள்ளது உடன் ஸ்மார்ட்போனின் பக்கங்களிலும் வளைந்த-விளிம்புகளும் காணப்படுகிறது.

 புகைப்படம்

புகைப்படம்

இந்த புகைப்படம் ஆனது டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் "ஒரு வடிவமைப்பை மிஞ்சியதாக இருக்கலாம்" என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ளது. மிக கூர்மையாக, இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இன்னும் வெளியாகாத பட்சத்தில், எஸ்10 பற்றிய அம்சங்களை ஆராய்வது வேடிக்கையாக இருக்கும். இருந்தாலும் கூட, சாம்சங் நிறுவனம் எஸ்10 மீதான போதுமான வேலை முடிந்து விட்டது என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளதால், லீக்ஸ் அம்சங்கள் மிக விரைவில் நமது கைகளை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

கைரேகை சென்சார்:

கைரேகை சென்சார்:

வெளியான கான்செப்ட் ஆனது கேலக்ஸி எஸ்10 தானா அல்லது இல்லையா.? என்கிற நியாய தர்மங்களை ஓரங்கட்டி விட்டு பார்த்தால், இந்த ஸ்மார்ட்போன் கான்செப்ட் மிகவும் அழகானதாக உள்ளது. கூறப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஆனது சிஇஎஸ் 2019 நிகழ்விற்கு முன்பே
எந்த நேரத்திலும் அறிமுகமாகவும் வாய்ப்புகள் உள்ளது. கண்டிப்பாக டிஸ்பிளேவின் கீழ உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டிருக்கும் உடன் அண்டர் டிஸ்பிளே ஸ்பீக்கர் தொழில்நுட்பம் மற்றும் ஒரு மூன்று கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S10 plus Tipped to Sport Dual Front Triple Rear Cameras: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X