பிப்ரவரி 20: சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் அறிமுகம்.!
மேலும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.
சாம்சங் நிறுவனம் வரும் பிப்ரவரி 20-ம் தேதி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் வெளியாக தயார் நிலையில் இருக்கும் ஸ்மார்ட்போனின் சில விவரங்கள் ஆன்லைனில்
வெளிவந்துள்ளது.

அதன்படி கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் ஒற்றை செல்பீ கேமராம், கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இரு செல்பீ கேமராக்களும் இடம்பெற்றுள்ளது, மேலும் இவற்றின் பின்பு மூன்று கேமரா வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேலக்ஸி எஸ்10 பிளஸ்:
மேலும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்பதால் இயக்கத்திற்கு மிக அருமையாக
இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார்
பின்பு புதிய சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களில் இன்-டிஸ்பிளே கைரேகை சென்சார் வழங்கபடும் என எதிர்பார்கப்படுகிறது, மேலும் வழக்கம்போல் பிக்ஸ்பி பட்டன் மற்றும் வால்யூம் பட்டன் வழங்கப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்க்பபட்டுள்ளது.

கேலக்ஸி எஸ்10 லைட்
அதேபோன்று புதிய கேலக்ஸ எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் 6.1-இன்ச் டிஸ்பிளேவுடன் வெளிவரும் என்றும், பின்பு இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை, பசுமை போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விலை
கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸமார்ட்போன்களின் ஆரம்ப விலை ரூ.60,730 என்றும் அதிகபட்சமாக ரூ.1,27,005 விலையிலும்
விற்பனைக்கு வெளிவரும். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களை கொண்டுள்ளன இந்த ஸ்மார்ட்போன்
மாடல்கள்.


Click it and Unblock the Notifications