பிப்ரவரி 20: வியக்கவைக்கும் விலையில் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்10 லைட், எஸ்10, எஸ்10 பிளஸ்.!
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் பொதுவாக பசுமை, வெள்ளை மற்றும் கருப்பு போன்ற நிறங்களில் வெளிவரும்
அமெரிக்காவில் வரும் பிப்ரவரி 20-ம் தேதி சாம்சங் நிறுவனம் அதன் கேலக்ஸி எஸ்10 லைட், கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள்
விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களின் வடிவமைப்புக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்க்கது. பின்பு இந்த மூன்று ஸ்மார்ட்போன்களிலும், இரட்டை கேமரா அமைப்பு மற்றும் மூன்று கேமரா
அமைப்பு இடம்பெற்றுள்ளது என அந்நிறுவனம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிப்செட்:
கேலக்ஸி எஸ்10 லைட், கேலக்ஸி எஸ்10 மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் பொதுவாக ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் அடிப்படையாக கொண்டு வெளிவரும், அதேபோன்று எக்ஸிநோஸ் 9820 சிப்செட் வசதிகளை கொண்டுள்ளது இந்த மூன்று ஸ்மார்ட்போன்கள்

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட்:
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் பொறுத்தவரை மஞ்சள், பசுமை, வெள்ளை, கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.63,000-ஆக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10:
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் பொதுவாக பசுமை, வெள்ளை மற்றும் கருப்பு போன்ற நிறங்களில் வெளிவரும், அதேபோன்று
6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். மேலும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ,72,000 மற்றும் ரூ.95,000-என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ்:
சாம்சங் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போன் வெள்ளை,பசுமை, கருப்பு போன்ற நிறங்களில் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, அதேபோன்று 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி இவற்றுள் அடக்கம். மேலும் கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.1,05,000 மற்றும் 1,30,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications