Home
Mobile

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஒன் யுஐ 3.0 கிடைக்கத் துவங்கியுள்ளது. மேலும் இந்த புதிய மென்பொருள் அப்டேட் கேலக்ஸி எஸ் 10 லைட்டுக்கு டிசம்பர் 2020 security patch-க் கொண்டுவருகிறது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

XDA Developers, அறிக்கையின்படி முதலில் இந்த அப்டேட் ஆனது அமெரிக்கா, ரஷ்யா, ஸ்பெயின், பனாமா மற்றும் இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் chat bubbles features, மீடியா கட்டுப்பாடுகள், மேம்பட்ட அனுமதி உள்ளிட்டவை இந்த அப்டேட்-ல் கிடைக்கும்.

அதேபோல் சாம்சங் இணையம், சாம்சங் விசைப்பலகை, பிக்ஸ்பி நடைமுறைகள் புதுப்பிக்கப்பட்ட அமைப்புகள் மற்றும் பலவற்றை மேம்படுத்துகிறது இந்த புத்தம் புதிய அப்டேட்.கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!

கேலக்ஸி எஸ்10 லைட் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.

Best Mobiles in India

English summary
Samsung Galaxy S10 Lite receiving One UI 3.0 with Android 11 update : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X