சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனுக்கு அதிரடி சலுகை.! உடனே முந்துங்கள்.!
பிளிப்கார்ட் தளத்தில் மிகவும் எதிர்பார்த்த கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அதிரடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.4000-என்கிற தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. இந்த சலுகையை பெற பயனர்கள் எச்.டி.எஃப்.சி வங்கி கார்டுகளை பயன்படுத்த வேண்டும். இதுதவிர கேலக்ஸி எஸ் 10 லைட் ஸ்மார்ட்போனை வாங்குபவர்களுக்கு 6 மாத கால யூடியூப் பிரீமியம் சந்தா இலவசமாக கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட்
இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் விலை ரூ.42,999-ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதனுடள்
கூகுள் நெஸ்ட் மினி Charcoal-ஐ வெறும் ரூ.1,999 க்கு வாங்கவும் வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இந்த சலுகைகள் வரும்ஜூன் 30 க்குப் பிறகு முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவுடன் வெளிவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் எஸ் பென் ஸ்டைலஸுடன் வருகிறது, பின்பு 1080 x 2400 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ரூ.15 லட்சம் பரிசு அறிவித்த நாசா: இதைமட்டும் செய்தால் போதும்., ஆகஸ்ட் 17 வரை டைம் இருக்கு!

128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி
கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/512ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக
கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி
இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 10
இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ்
சாம்சங் கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி லென்ஸ் + 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது, மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை
நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

4500எம்ஏஎச் பேட்டரி
கேலக்ஸி எஸ்10 லைட் சாதனத்தில் 4500எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, மேலும்
வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் அடக்கம்.


Click it and Unblock the Notifications