புதிய சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.11,000-வரை தள்ளுபடி.!
குறிப்பாக கேலக்ஸி எஸ்10 (512ஜிபி) மாடல் விலை ரூ.84,990-ஆக உள்ளது.
சாம்சங் நிறுவனம் அன்மையில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி மற்றும் கேஷ்பேக் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த விலைகுறைப்பு சலுகையை கண்டிப்பாக பல்வேறு
மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்10இ
சாம்சங் கேலக்ஸி எஸ்10இ என்ற ஸ்மார்ட்போன் வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.9,000-வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பின்பு மற்ற வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் ரூ.5000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்10
அதேபோல் கேலக்ஸி எஸ்10 (128ஜிபி) சாதனத்தை வாங்கும் வாடிக்கையாளர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ.6000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது, மற்ற கார்டுகளை பயன்படுத்தும் போது
ரூ.5000 வரை கேஷ்பேக் பெற முடியும். பின்பு கேலக்ஸி எஸ்10 (512ஜிபி) மாடல் வாங்கும் போது ரூ.8000 வரை உடனடி கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

கேலக்ஸி எஸ்10 பிளஸ்
கேலக்ஸி எஸ்10 பிளஸ் 128ஜிபி மற்றும் 512ஜிபி அல்லது 1000ஜிபி வேரியண்ட்களை வாங்கும் போது ரூ.9000 அப்கிரேடு போனஸ் மற்றும் தேர்வு செய்யப்பட் வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ.6000 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகையின்றி கேல்கஸி எஸ்10 பிளஸ் 1000 ஜி.பி. வேரியண்ட் விலை ரூ.1,17,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விலை
குறிப்பாக கேலக்ஸி எஸ்10 (512ஜிபி) மாடல் விலை ரூ.84,990-ஆக உள்ளது.
கேலக்ஸி எஸ்10 (128ஜிபி) மாடல் விலை ரூ.66,990-ஆக உள்ளது.
கேலக்ஸி எஸ்10இ (128 ஜிபி) மாடல் விலை ரூ.55,900-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications