மூன்று கேமராக்களுடன் களமிறங்கும் கேலக்ஸி எஸ்10.!
கான்செப்ட் படங்கள் வெளியாகியுள்ளதே ஒழிய, எஸ்10 எப்போது வெளியாகும் என்பது பற்றிய எந்த விவரமும் கிடையாது.
சாம்சங் நிறுவனம் தொடர்ந்து புதிய அறிவிப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளது, அதன்படி விரைவில் அறிமுகப்படுத்தும் கேலக்ஸி எஸ்10 ஸ்மாரட்போனை அறிமுகப்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்கள் வழங்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போன் சாதனத்தில் 12 எம்பி டூயல் அப்ரேச்சர் லென்ஸ், 16 எம்பி (f/1.9) மற்றும் 13 எம்பி (f2.4) லென்ஸ் வசதி இடம்பெற்றுள்ளது என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது. குறிப்பாக வைடு-ஆங்கில் லென்ஸ்-இல் ஆட்டோஃபோக்கஸ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
காட்சிப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனில் சில புரட்சிகர அம்சங்களை காண முடிகிறது. கேலக்ஸி எஸ்10 ஆனது முற்றிலும்
பெஸல்லெஸ் ஆக வெளியாகலாம். அதனை தான் எஸ்10 கான்செப்ட்டும் வெளிப்படுத்தியுள்ளது உடன் ஸ்மார்ட்போனின் பக்கங்களிலும்
வளைந்த-விளிம்புகளும் காணப்படுகிறது.
கான்செப்ட் படங்கள் வெளியாகியுள்ளதே ஒழிய, எஸ்10 எப்போது வெளியாகும் என்பது பற்றிய எந்த விவரமும் கிடையாது. அதே சமயம் இந்த ஸ்மார்ட்போனின் பெயர் சாம்சங் கேலக்ஸி எஸ்10 தான் என்பதிலும் எந்த உறுதியும் இல்லை
என்பதையும் தெளிவுபடுத்துகிறோம்.

இந்த புகைப்படம் ஆனது டிப்ஸ்டர் ஐஸ் யுனிவர்ஸ் மூலம் "ஒரு வடிவமைப்பை மிஞ்சியதாக இருக்கலாம்" என்கிற தலைப்புடன் வெளியாகியுள்ளது.
மிக கூர்மையாக, இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போன் இன்னும் வெளியாகாத பட்சத்தில், எஸ்10
பற்றிய அம்சங்களை ஆராய்வது வேடிக்கையாக இருக்கும். இருந்தாலும் கூட, சாம்சங் நிறுவனம் எஸ்10 மீதான போதுமான வேலை முடிந்து விட்டது
என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளதால், லீக்ஸ் அம்சங்கள் மிக விரைவில் நமது கைகளை எட்டும் என்று எதிர்பார்க்கலாம்.

வெளியான கான்செப்ட் ஆனது கேலக்ஸி எஸ்10 தானா அல்லது இல்லையா.? என்கிற நியாய தர்மங்களை ஓரங்கட்டி விட்டு பார்த்தால், இந்த
ஸ்மார்ட்போன் கான்செப்ட் மிகவும் அழகானதாக உள்ளது. கூறப்படும் சாம்சங் கேலக்ஸி எஸ்10 ஆனது சிஇஎஸ் 2019 நிகழ்விற்கு முன்பே எந்த
நேரத்திலும் அறிமுகமாகவும் வாய்ப்புகள் உள்ளது. கண்டிப்பாக டிஸ்பிளேவின் கீழ உட்பொதிக்கப்பட்ட கைரேகை சென்சாரை கொண்டிருக்கும்
உடன் அண்டர் டிஸ்பிளே ஸ்பீக்கர் தொழில்நுட்பம் மற்றும் ஒரு மூன்று கேமரா அமைப்பு ஆகியவற்றைக் கொண்டு வெளியாகும் என்றும்
எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications