கேலக்ஸி எஸ் III போனுக்கு ஜெல்லி பீன் அப்டேட்டை வழங்கும் சாம்சங்

Posted By: Karthikeyan
கேலக்ஸி எஸ் III போனுக்கு ஜெல்லி பீன் அப்டேட்டை வழங்கும் சாம்சங்

சாம்சங்கின் மிகவும் பிரபலமான கேலக்ஸி எஸ் III ஸ்மார்ட்போன் மிக விரைவில் ஒரு புதிய அப்டேட்டைப் பெற இருக்கிறது. அதாவது வரும் அக்டோபரில் இந்த போனுக்கு ஆன்ட்ராய்டு வி4.1 செல்லி பின் அப்டேட்டை வழங்க இருக்கிறது சாம்சங்.

இந்த ஜெல்லி பீன் அப்டேட் மூலம் இந்த எஸ்III போன் ஏராளமான புதிய வசதிகளைப் பெறும் என்று நம்பலாம். குறிப்பாக இந்த போனில் இருக்கும் யூசர் இன்டர்பேஸ் மற்றும் கேமரா போன்ற தொழில் நுட்பங்களில் பெரிய மாற்றம் இருக்கும்.

இந்த அப்டேட்டை வரும் அக்டோபரில் செய்ய இருப்பதாக சாம்சங் உறுதிப்படுத்தி இருக்கிறது. ஆனால் இன்னும் அதற்கான தேதியை அறிவிக்கவில்லை. மேலும் ஐரோப்பிய சந்தையில் மட்டுமே இந்த அப்டேட்ட செய்ய இருக்கிறது சாம்சங். மேலும் இந்த அப்டேட் நாடுகளுக்கு நாடு மாறுபடும்.

ஏற்கனவே இந்த ஜெல்லி பீன் இயங்கு தளத்தை தனது எஸ் II மற்றும் எஸ் III போன்களை பரிசோதனை செய்து பார்த்துவிட்டது. அதனால் இந்த புதிய அப்டேட் எஸ்III போனின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்