Home
Mobile

ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சாம்சங் கேலக்ஸி எஸ் 3

By Karthikeyan
ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடம் பிடித்த சாம்சங் கேலக்ஸி எஸ் 3

இந்த ஆண்டின் 3வது காலாண்டில் சாம்சங்கின் கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போனின் விற்பனை ஆப்பிளின் 4எஸ் ஸ்மார்ட்போனின் விற்பனையை முறியடித்திருக்கிறது. இதன் மூலம் கேலக்ஸி எஸ்3 முதல் முறையாக ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக ஒரு ஆய்வு நடத்தும் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

மேலும் ஆப்பிள் தற்போதுதான் தனது ஐபோன் 5ஐ களமிறக்கியது. அப்படி இருந்தும் சாம்சங் எஸ்3 விற்பனையில் ஆப்பிளை முந்தி இருப்பதாக ஸ்ட்ராட்டஜி அனலடிக்ஸ் என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் ஐபோன் 5 மற்றும் ஐபோன் 4எஸ் ஆகியவை இணைந்து காலக்ஸ் எஸ்3 விற்பனையை முந்தி இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

உலக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையில் 11 சதவீத விற்பனையை கேலக்ஸி எஸ்3 பெற்றிருக்கிறது. அதன் மூலம் கேல்க்ஸி எஸ்3 தற்போது ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தைப் பிடித்திருப்பதாக ஸ்ட்ராடஜி அனலடிக்சின் நெய்ல் ஷா தெரிவிக்கிறார்.

கேலக்ஸி எஸ்3ல் உள்ள டச் திரை வசதி மேலும் இந்த போனை உலக அளவில் பெரும்பாலான நாடுகளில் விற்பனை செய்தது ஆகியவையே கேலக்ஸி எஸ்3ன் வெற்றிக்குக் காரணம் என்றும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

ஜூலை முதல் செப்டம்பர் 30 வரை ஏறக்குறைய 15 மில்லியன் கேலக்ஸி எஸ்3 போன்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. அதே நேரத்தில் ஆப்பிள் 16.2 மில்லியன் ஐபோன் 4எஸ் போன்களை மட்டுமே விற்பனை செய்திருக்கிறது. அதே நேரத்தில் 6 மில்லியன் ஐபோன் 5ஐ விற்பனை செய்திருக்கிறது.

இதன் மூலம் சந்தையில் கேலக்ஸி எஸ்3 ஸ்மார்ட்போன் 10.7 சதவீதத்தையும், ஐபோன் 4எஸ் 9.7 சதவீதத்தையும் மற்றும் ஐபோன் 5 போன் 3.6 சதவீதத்தையும் பிடித்திருக்கிறது.

ஆனால் விரைவில் ஐபோன் 2 ஸ்மார்ட்போன் சந்தையில் முதலிடத்தைப் பிடிக்கும் என்று அந்த ஆய்வு ஆருடம் கூறுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X