கேலக்ஸி எஸ் III போனுக்கான துணைப் பேட்டரியை வழங்கும் சாம்சங்

Posted By: Karthikeyan
கேலக்ஸி எஸ் III போனுக்கான துணைப் பேட்டரியை வழங்கும் சாம்சங்

சாம்சங் மொபைல் இந்தியா நிறுவனம் மிகவும் பிரபலமான சாம்சங் கேலக்ஸி எஸ் III என்ற ஸ்மார்ட்போனை கடந்த மே மாதம் இந்தியாவி்ல் அறிமுகம் செய்து வைத்தது. இந்த போனுக்கு இந்தியாவில் சூப்பாரன வரவேற்பு கிடைத்துள்ளது.

எனவே இந்த போனுக்கான புதிய உபரி பாகங்களை தற்போது சாம்சங் களமிறக்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக இது வரை இந்த போனுக்கான துணை பேட்டரியை சாம்சங் வழங்காமல் இருந்தது. தற்போது இந்த போனுக்கான என்எப்சி வசதியுடன் கூடிய 2100 எம்எஎச் பேட்டரியைக் களமிறக்கி இருக்கிறது.

இந்த பேட்டரியை சாம்சங்கின் ஸ்டோர்களில் சில்லறை விலைக்கு வாங்கலாம். குறிப்பாக இந்தியாவில் உள்ள முக்கிய மாநகரங்களில் இந்த பேட்டரி ரூ.1,599க்கு விற்கப்படுகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot