ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்-3!

By Super
|
ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் கேலக்ஸி எஸ்-3!

வருகிற ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகமாகும் சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன். வாடிக்கையாளர்களை அதிகம் ஏங்க வைத்த சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன், எப்போது அறிமுகமாகும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வந்தது. இந்த எதிர்பார்ப்புக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளது சாம்சங் நிறுவனம். நேற்று

நல்லிரவில் சாம்சங் எஸ்-3 ஸ்மார்ட்போன் லண்டனில் அறிமுகமாகி உள்ளது. இந்த மாதம் 29-ஆம் தேதி சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஐரோப்பா நாடுகளில் அறமுகமாகும்.

இந்த விஷயத்தை கேட்ட உடன் வாடிக்கையாளர்களிடம் இருந்து வரும் அடுத்த கேள்வி இந்தியாவில் எப்போது அறிமுகமாகும்? என்பது தான். வருகிற ஜூன் மாதம் இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் பற்றிய விலை விவரம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு இன்னும் ஓர் சூடான தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ரூ.38,000 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X