TRENDING ON ONEINDIA
-
ஒதுக்கி ஓரம் கட்டப்படும் தம்பிதுரை.. அதிமுகவில் என்னதான் நடக்குது?
-
கை கட்டுகளை அவிழ்த்து விட்ட மோடி... பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட முழு வீச்சில் தயாராகும் இந்திய ராணுவம்...
-
Nayanthara: காதலர் தினத்தில் நயன், விக்கி ஒரே கொஞ்சல்ஸ், முத்தம்: கடுப்பில் மொரட்டு சிங்கிள்ஸ்
-
கொடூரனான துரியோதனன் எப்படி சொர்க்கத்துக்கு சென்றான்? அப்படி என்ன லஞ்சம் கொடுத்தான் தெரியுமா?
-
வாட்ஸ்ஆப்: இனி குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை.!
-
Ind vs Aus : தினேஷ் கார்த்திக் இடத்தை பறித்த ரிஷப் பண்ட்.. அணியில் இடம் பெற்ற ராகுல், விஜய் ஷங்கர்
-
வெனிசூலாவில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதா - இந்தியாவை எச்சரிக்கும் அமெரிக்கா
-
250 தூண்கள் கொண்ட தென் காளகஸ்தி - சனியிலிருந்து தப்பிக்க உடனே போங்க
கேலக்ஸி எஸ்-II ஸ்கைராக்கெட் என்ற மொபைலை அறிமுகப்படுத்துகிறது சாம்சங் நிறுவனம். பெயருக்கு ஏற்ற வகையில் சீறிப்பாயும் அளவுக்கு இதில் தொழில் நுட்பமும் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஸ்மார்ட் மொபைல்களில் உயர்ந்த மற்றும் புதிய வசதிகளின் பயனை ருசிக்க ஏராளமான வாடிக்கையாளர்கள் காத்திருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் மக்களை குதூகலிக்க வைக்கும் வகையில் 4ஜி பூம் தொழில் நுட்பம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இது ஆன்ட்ராய்டு 2.3.5 ஜின்ஜர்பிரீட் தொழில் நுட்பம் கொண்டது. இதன் 1.5 ஜிஎச்இசட் டியூவல் கோர் பிராசஸர், இந்த மொபைலின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்க பெரிதும் துணைபுரிகிறது.
800 X 480 பிக்ஸல் சூப்பர் அமோல்டு ப்ளஸ் திரை இதில் கொடுக்கப்பட்டுள்ளது. 4.5 இஞ்ச் அகன்ற திரை கொண்ட இந்த ஸ்மார்மொபைல் வாடிக்கையாளர்களுக்கு எல்லா விதத்திலும் சவுகரியத்தைக் கொடுக்கிறது.
கேலக்ஸி எஸ்-II ஸ்கைராக்கெட் மொபைல் இரட்டை கேமரா கொண்டுள்ளது. லெட் ஃபிளாஷ் வசதி கொண்ட 8 மெகா பிக்ஸல் கேமராவும், 2 மெகா பிக்ஸல் கொண்ட முகப்புக் கேமராவும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் கண்ணுக்குத் தென்பட்ட அனைத்து விஷயங்களையும் புகைப்படம் எடுத்து குவிக்கவும், வீடியோ ரெக்கார்டிங் செய்யவும் முடிகிறது. இதில் 16ஜிபி வரை மெமரியும், 32ஜிபி வரை கூடுதல் மெமரியும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஏடி&டியின் நிறுவனத்தின் 4ஜி எல்டிஇ சேவையுடன் இந்த மொபைல் வாஷிங்டன், ஏதென்ஸ், பால்டிமோர், போஸ்டன் ஆகிய நகரங்களில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏடி&டி சேவை தொடர்பு நிறுவனம், இன்னும் 70 மில்லியன் அமெரிக்கர்களை திருப்திப்படுத்த இருப்பதாகவும் திட்டமிடப்பட்டுள்ளது. உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்மொபைல் முதலில் அமெரிக்க மார்கெட்டில் தான் விற்பனைக்கு வர உள்ளது. அமெரிக்க மொபைல் வாடிக்கையாளர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது.