அதிவகேத்தில் அசத்தும் புதிய சாம்சங் 4ஜி ஸ்மார்ட்போன்!

கேலக்ஸி வரிசையில் பட்டையை கிளப்பும் தொழில் நுட்ப வசதிகளை கொடுத்து கொண்டு இருக்கிறது சாம்சங் நிறுவனம். அந்த பட்டியலில் புதிய எஸ் ப்ளேஸ் 4ஜி என்ற ஸ்மார்ட்போனையும் சேர்க்கலாம். ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் டியூவல் கோர்
பிராசஸரை கொண்டுள்ளது. இதனால் வேகமான இயக்கத்தை இந்த ஸ்மார்ட்போன் மூலம் பெறலாம்.
இதில் கியூவள்காம் ஸ்னாப்டிராகன் சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது.
பார்ப்பவர்களது கண்களை மிக எளிதாக கவர்வது மொபைலின் திரை வசதி தான். 4.52 இஞ்ச் தொடுதிரை வசதியுடன் பிரம்மாண்ட தோற்றத்தையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும். 480 X 800 பிக்ஸல் கேமரா துல்லியத்தையும் கொடுத்து தகவல்களை தெளிவாக காட்ட உதவும்.
சில வாடிக்கையாளர்கள் கேமரா வசதியை சிறப்பாக இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர். அதே போல் இந்த ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த, கியூட்டான புகைப்படங்களை கொடுக்கும். இன்னொரு சிறப்பு என்னவென்றால் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியை இந்த ஸ்மார்ட்போனின் கேமரா
அளிக்கிறது. இதில் 2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும் உள்ளது.
இந்த ஸ்மார்ட்போனை பொருத்த வரையில் 16ஜிபி மற்றும் 32ஜிபி இன்டர்னல் மெமரி வசதி உள்ளது. இதன் எக்ஸ்டர்னல் வசதியை 32ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்தி கொள்ளலாம். ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 2ஜி, 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் அழகாய் துணை புரிகிறது.
இப்படி இந்த ஸ்மார்ட்போனின் வசதியை சொல்லி கொண்டே போகலாம். வசதிகளை அள்ளி கொடுக்கும் இந்த கேலக்ஸி எஸ் ப்ளேஸ் 4ஜி ஸ்மார்ட்போன் வரும் ஏப்ரல் அல்லது ஜூன் மாதம் வெளியாகும் என்று கருதப்படுகிறது.


Click it and Unblock the Notifications