Home
Mobile

புதிய அவதாரம் எடுத்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!

By Super
புதிய அவதாரம் எடுத்த சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்!

பயன்படுத்த எளிய முறையிலும், தொழில் நுட்பத்தில் புதுமையையும் கொடுத்து வந்த சாம்சங் நிறுவனம் இப்பொழுது தனது கேலக்ஸி வரிசையில் புதிய சிடிஎம்ஏ ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ் ஏவியேட்டர் என்ற பெயரில் இந்த ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறது சாம்சங்.

இதில் அதிக ஆற்றல் வாய்ந்த 1 ஜிகாஹெர்ட்ஸ் ஹம்மிங்பேர்டு பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பிராசஸர் ஏவியேட்டர் ஸ்மார்ட்போனின் கூகுள் ஆன்ட்ராய்டு 2.3.6 ஆப்பரேட்டிங் சிஸ்டம் சுலபமாக இயங்க துணை புரியும்.

இந்த புதிய ஸ்மார்ட்போன் 4.3 பிரம்மாண்டமான திரை வசதியை வழங்கும். இதனால் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும். இதன் 8 மெகா பிக்ஸல் கேமரா லெட் ஃப்ளாஷ் தொழில் நுட்பம் கொண்டது.

வீடியோ காலிங் வசதிக்கு 1.3 மெகா பிக்ஸல் கேமராவையும் இந்த ஏவியேட்டர் ஸ்மார்ட்போன் கொடுக்கும். தொழில் நுட்ப வசதிகள் அதிகம் இருந்தாலும், அந்த வசதிகளை பயன்படுத்த ஸ்மார்ட்போனின் பேட்டரி ஒத்துழைக்குமா என்பதையும் பார்க்க வேண்டும்.

இதில் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1,500 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இதனால் 660 நிமிடங்கள் டாக் டைம் வசதிக்கு இந்த ஸ்மார்ட்போன் சப்போர்ட் செய்யும். ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற தொழில் நுட்பமும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி வரிசை ஸ்மார்ட்போன்கள் அனைத்தும் சிறந்த தொழில் நுட்பத்தினை வழங்கி கொண்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் இந்த புதிய கேலக்ஸி எஸ் ஏவியேட்டர் ஸ்மார்ட்போனும் சேரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் விலை பட்டியலை சாம்சங் நிறுவனம் இன்னும் அதிகார பூர்வமாக வெளியிடவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X