பாதுகாப்பு அதான முக்கியம்: அட்டகாச பாதுகாப்பு அம்சத்தோடு சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2!
சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் குவாண்டம் 2 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் இன்ஃபினிட்ட-ஓ அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ப்ளஸ் உடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போன் முக்கிய சிறப்பம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த பாதுகாப்பு அம்சமான குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேஷன் சிப்செட் உடன் வருகிறது. சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன் குவாண்டம் 2 அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 120 ஹெர்ட்ஸ் இன்ஃபினிட்ட-ஓ அமோலெட் டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 855 ப்ளஸ் உடன் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேலக்ஸி குவாண்டம் 2 முக்கிய சிறப்பம்சம்
சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போன் தென்கொரிய சந்தையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் தென்கொரியாவில் உள்ள எஸ்கே டெலிகாம் நிறுவனத்துடன் இணைந்து அறிவிக்கப்பட்டிருக்கிறது. சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 முக்கிய சிறப்பம்சமாக இருப்பது அதன் பாதுகாப்பு நோக்கங்கள் ஆகும். இது குவாண்டம் ரேண்டம் எண் ஜெனரேஷன் சிப்செட் உடன் வருகிறது.

இதன் குவாண்டம் ரேண்டம் எண் தலைமுறை சிப்செட்டானது இக்கட்டான பாதுகாப்பு உறுதித்தன்மை, நிதி பரிமாற்றம் மற்றும் மெசேன்ஜர் ஆகியவைகளை முக்கியமான பாதுகாப்பு சேவைகள் மூலம் பயன்படுத்த முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 சாதனமான தென்கொரியாவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் இந்திய விலை ரூ.46.945 ஆக நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் முன்னதாகவே தென்கொரியாவில் எஸ்கே டெலிகாமில் ஆர்டருக்கு கிடைக்கிறது என தெரிவிக்கப்படுகிறது. சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போனானது சாம்சங் கேலக்ஸி ஏ82 என உலக சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 விவரக்குறிப்புகள்
சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் குவாட் எச்டி ப்ளஸ் இன்பினிட்டி-ஓ டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் 3200x1440 பிக்சல்கள் மற்றும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வரும் என கூறப்படுகிறது. இதுகுறித்து ஹூட்டின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்சேமிப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 1டிபி வரை மெமரி விரிவாக்க வசதிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் இருக்கிறது.

4500 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஆதரவு
சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 ஸ்மார்ட்போனில் பாதுகாப்பு அம்சத்துக்கு கைரேகை சென்சார் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 11 ஐ மூலம் யூஐ3.1உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4500 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு 25 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியோடு இருக்கிறது. சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 கேமரா அம்சத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனானது 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா என மூன்று கேமராவுடன் வருகிறது. மேலும் 12 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் லென்ஸ் இரண்டாம் நிலை கேமரா, 5 மெகாபிக்சல் ஆழ சென்சார் என மூன்றாம் நிலை கேமராவுடன் வருகிறது. மேலும் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 10 மெகாபிக்சல் செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள் விவரங்கள்
அதேபோல் சாம்சங் கேலக்ஸி குவாண்டம் 2 சாதனத்தில் இணைப்பு ஆதரவுகளாக இரட்டை சிம் ஆதரவு, 5ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத் 5, சாம்சங் பே ஆகியவை உள்ளது. இந்த சாதனத்தில் யூஎஸ்பி டைப் சி போர்ட் வசதி இருக்கிறது. இதன் எடை 176 கிராம் ஆக உள்ளது.
File Images


Click it and Unblock the Notifications