கேலக்ஸி பிரீமியர் போனின் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தை சாம்சங்

Posted By: Karthikeyan
கேலக்ஸி பிரீமியர் போனின் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தை சாம்சங்

சாம்சங் நிறுவனம் தயாரித்து வரும் கேலக்ஸி பிரீமியர் என்ற ஒரு புதிய ஸ்மார்ட்போனைப் பற்றி ஏராளமான வதந்திகள் வந்தன. தற்போது அந்த வதந்திகளுக்கெல்லாம் சாம்சங் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. அதாவது இந்த கேலக்ஸி பிரீமியர் போனை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்து வைத்திருக்கிறது.

அதன்படி வரும் நவம்பரில் இந்த பிரீமியர் போனை ரஷ்யாவில் களமிறக்க இருக்கிறது சாம்சங். ஆனால் இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இந்த கேலக்ஸி பிரீமியர் (19260) பார்ப்பதற்கு கேலக்ஸி எஸ் 3 போல இருக்கும்.

இந்த கேலக்ஸி பிரீமியர் போன் பல ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இந்த போன் ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இதன் 4.65 இன்ச் எச்டி சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே மிகவும் துல்லியமாக இருக்கும்.

இந்த போனில் இரண்டு சூப்பரான கேமராக்கள் உள்ளன. அதாவது இந்த போனில் ஆட்டோ போக்கஸ் கொண்ட 8எம்பி பின்பக்க ஆட்டோ போக்கஸ் கேமராவும் மற்றும் 1.9எம்பி முகப்புக் கேமராவும் உள்ளன.

இந்த போன் 1.5 ஜிஹெர்ட் டூவல் கோர் டிஐ ஒஎம்எபி 4470 ப்ராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் கொண்டிருப்பதால் மிகவும் வேகமாக இயங்கும் என்று நம்பலாம். மேலும் இந்த போனில் 8ஜிபி மற்றும் 16ஜிபி சேமிப்பு வசதிகள் உள்ளன. இந்த சேமிப்பை 64ஜிபி வரை எஸ்டி கார்டு மூலம் விரிவு செய்யும் வசியும் உள்ளது. இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் வைபை, ப்ளூடூத் மற்றும் என்எப்சி போன்ற வசதிகளும் உள்ளன. தற்போது இந்த போனைப் பற்றிய பரபரப்பு ரசிகர்களிடையே அதிகமாக உள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்